Wednesday, June 8, 2016

மழை.

இடி முழங்கி வந்தத் சாரல் இன்று மௌனமானதோ,
உன் வெட்கம் அவிழ்க்க வந்த தூறல் ஒரு கணம் தரித்து நின்றதோ..
என் இளமையும் கொஞ்சம் கொஞ்சமாய் நீரில் இன்று கரைந்துப்போகுதோ,
என் எதிரினில் நீ கொஞ்சிப் பேசிடுகையில் மழை நீரும், மெல்ல வெள்ளமாகுதோ...
தனிமையில் உன் நினைவுகள் என்னை மேகமாய் சூழுதோ,
கனவுகளாய் உன் விம்பங்கள் என் கண்களில், மின்னலாய் வந்து மறையுதோ...
தவிப்புகள் துளிகளாய் மாறி கடலுடன் சேருமோ,
அதில் மெதுவாய் நகரும் என் பேழையை உன் இருதயம் ஏற்க்குமோ..
சத்தம் இன்றி மழையில் உன் இதழ்கள் என் இதழ்களை சுவைக்காதோ,
அந்த நிமிடம் எம் கண்களும் மீன்களாய் வாழ்ந்திட துடிக்குதோ..
இந்த கணம் உன் கண்ணீரும் கடலுடன் கலந்திட முடிவெடுத்ததோ,
அதை நான் கண்டுபிடிக்கும் வரை,
தினமும் மழையாய், காதலில் நீயும் என்னை நனைப்பாயோ...?

Sunday, September 14, 2014

ஆட்டம் - தமிழ் குறும்திரைப்படம்

ஆட்டம் - தடைகள் உடைத்து புது தடம் பதிக்க எடுத்த புதிய முயற்சி..
இன்று முதல் ஆரம்பம்..



Saturday, November 2, 2013

ராதை மனதில்...

என் முதல் குறுந் திரைப்படம்...

http://www.youtube.com/watch?v=_4CZIlqQ7jU

Saturday, October 5, 2013

இமைகளும் துடிக்குதோ...

சிலிர்க்கும் இந்த இரவுகள், தவித்து இருக்கும் இந்த தருணங்கள்,
 சிரிப்பை மறந்து நிற்கும் நிமிடங்கள், தினம் நீளுதே உயிரே...

கொட்டும் பனியில் இந்த கோடை வெயில் வந்து,
 என்னை அள்ளிச் சென்று கோடம்பாக்கம் விட்டுச் செல்ல...

உன்னைத் தேடியே நானும் ஏறும் பேருந்து கூட,
 விண்ணைத் தொடும் வேகம் கொண்டு தான் பறந்து செல்ல...

பேசுவாயோ கிளியே தினம் பேதையாகுறேன் தனியே,
 சாலையோரம் எங்கும் என் விழிகள் உன்னைத் தேடிடும் இனியே...

உன் கூந்தல் வருடிடவே, ஏங்கிடுதே எந்தன் விரல்கள்..
 உன் பாதம் தொட்டு இசைத்திடவே தவித்திடுதே இந்தக் கொலுசுப் பரல்கள்...

ஒரு நெஞ்சம், உயிர் காதல், உருவாகி அலைப்பாயுதே..
 இரு துருவம், இணைத்தக் காதல், உருகியே அலைமோதுதே...

~அன்புடன் கோகுலன்.

Monday, July 1, 2013

என்ன செய்தாய் பெண்ணே?

என் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே,
உன்னைக் கண்டதாலே மனம்  திண்டாடுதே...
விழி மோகம்  கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று,
கள்ளி என்னை நீயே கொத்திச் சென்றாய் நேற்று...

தொட்டால் குற்றமில்லை தொலைத் தூரத்தில் எல்லை,
விட்டில் கூட்டத்துக்கு வித்தைகள் வேலை இல்லை..
என் இதழ் ஈரம் கொண்டு உன் முகமும் நனைக்க,
ஆசைக் கொண்டதே இன்று  மனதின் திரையும் விலக...

மோகம்  தீரவில்லை மோட்சம் அடையும் நிலை,
மாலைத் தாங்கும் வரை வேகம் ஓய்வதுமில்லை,
விண்ணைத் தொடவா அன்பே மின்னல் மறையும் முன்னே,
காற்றில் தனியாய்ப் பறந்த நாட்களும் தடமானதே...

பெண்ணே எந்தன் மனம் அலைப்பாயுதே தினமும்,
கண்ணே உந்தன் கரம் பற்றும் காலமும் வரணும்...
சாலையில் தனியாய் நடந்த காலங்களும் அன்று,
அருகில் நீயும் வரவே தனிமை தொலைந்ததே இன்று...

~அன்புடன் கோகுலன்.

Tuesday, June 18, 2013

தரித்திருக்கிறேன்... தனித்திருக்கிறேன்... தவித்திருக்கிறேன்...

இதயங்கள் தடுமாறும்
தடம்மாறி வழி தேடும்
விடை இன்றி வினா கூடும்
கனவுகள் அலைந்தோடும்
காதலும் கசந்திடும்
கல் தட்டி தீட்டிடும்
சிலை(யின்) கண்கள்  என்னாகும்...?

மணி குயில் வெட்கத்தில் 
மனமிங்கு திகைத்து நிற்க
மலைக்குள்ளே ஒரு கிளியும்
மயங்கி தான் மரணிக்க
மன்னிப்பாயா? என்னை, என நானும்
மதில் மேல் பூனையாய் - ஏனடி?
மதி முடங்கி நிற்க...

கண் திறந்தேன் கனவில்லை இன்று,
விண் தொட எண்ணி தோற்றே உடைந்து,
மண் தொட்டு வீழ்ந்த பிணமாய் வெந்து,
பெண் அவள் விட்டு கண்ணீரில் நனைந்து,
புன் பட்டு அலைந்தே வீழ்ந்து,
பன் பட்டே மரமாய் எழுந்து....
உன் சொல்லால் கலங்கி கவிழுதோ என் இதயமே....

காலை உன்னை பார்க்க விளிக்கும் கண்களும்,
சாலை கண்டு உனக்காய் தேங்கும்,
மாலை வரை காத்திருந்தே ஏங்கும்,
பாலை நிலத்தில் வீழ்ந்த புழுவாய் வாடும்....

~அன்புடன் கோகுலன்

Saturday, May 25, 2013

எப்போதடி உணர்வாய்?

இதயமே இடையிலே இடைவெளிவிட்டுதான் துடிக்கிறதோ?
இரவிலே இமைக்குள்ளே உன் நினைவுகள் நனைக்கிறதோ?
இரு விழிகளே உன் இதழிலே என் உயிர் சமர்ப்பிக்குதோ?
இளமையோ இரு நொடியிலே நீ இன்றேல் முடியுதோ?

போதை மறந்து கிளியே புத்தனாய் நானும்,
பேதை போல் போதி மரம் தேடினேன் தினமும்,
பாதை மறந்து பயனிக்குதோ என் மனமும்,
சீதை இன்றேல் என்னாகும் இராமனின் கனவும்?

கொத்தும் தேளை அரவணைக்கும் என் மனமும் - இரவில்
கத்துதே காற்று வருடுகையில் தினமும்...
முத்துப் போல் மூழ்கியெடுத்தக் காதலும் - சடுதியில்
சத்தமின்றி போன மாயம் தான் விளங்கனும்...

கண் மூடுகையில் இருந்த நீ, கண் திறக்கவே மறைந்தாய்,
விண் சென்று தேடியும் கிடைக்கவில்லை எங்கே நீ தொலைந்தாய்?
என் கண்மணியே உன் வலியை ஏனடி மறைத்தாய்?
மண் இருக்கும் வரை என் காதல் அழியாது எப்போது அதை உணர்வாய்?

~அன்புடன் கோகுலன்.