Saturday, May 25, 2013

எப்போதடி உணர்வாய்?

இதயமே இடையிலே இடைவெளிவிட்டுதான் துடிக்கிறதோ?
இரவிலே இமைக்குள்ளே உன் நினைவுகள் நனைக்கிறதோ?
இரு விழிகளே உன் இதழிலே என் உயிர் சமர்ப்பிக்குதோ?
இளமையோ இரு நொடியிலே நீ இன்றேல் முடியுதோ?

போதை மறந்து கிளியே புத்தனாய் நானும்,
பேதை போல் போதி மரம் தேடினேன் தினமும்,
பாதை மறந்து பயனிக்குதோ என் மனமும்,
சீதை இன்றேல் என்னாகும் இராமனின் கனவும்?

கொத்தும் தேளை அரவணைக்கும் என் மனமும் - இரவில்
கத்துதே காற்று வருடுகையில் தினமும்...
முத்துப் போல் மூழ்கியெடுத்தக் காதலும் - சடுதியில்
சத்தமின்றி போன மாயம் தான் விளங்கனும்...

கண் மூடுகையில் இருந்த நீ, கண் திறக்கவே மறைந்தாய்,
விண் சென்று தேடியும் கிடைக்கவில்லை எங்கே நீ தொலைந்தாய்?
என் கண்மணியே உன் வலியை ஏனடி மறைத்தாய்?
மண் இருக்கும் வரை என் காதல் அழியாது எப்போது அதை உணர்வாய்?

~அன்புடன் கோகுலன்.

Friday, May 10, 2013

மழையே ...

என்னை கொஞ்சி நனைத்திடும் மழையே,
கோடையில் இன்று என்னை கட்டியணைத்திடும் மழையே ,
வாடையில் கோடி பூப்பூத்தாட் போல் பூத்தாயே மழையே,
தாடை ஓரம் வழியும் நீரில் என் உணர்வும் கரையுமோ மழையே...

கரும் கட்டழகி கண்கசக்கி தோன்றினாயோ மழையே?
வெறும் தரை காய்கிறதே என மண்ணில் வீழ்ந்தாயோ மழையே?
சிறு தூரல் கொண்டு கண்ணம் முத்தமிட்டாயோ மழையே? - அதில்
மறுபுறம் என் உடலையும் குளிரச் செய்தாயே மழையே...

தொடுவானம் இருந்து என்னை தொட்டாயே மழையே,
தொடுதூரம்  இல்லை, இருந்தும் என்னை விட்டாயா மழையே?
தொலைதூரத்தில் அவள், நனைக்காதே மழையே,
தொலைக்கவில்லை அவளை, நனைந்தாள் நான் கரைவேனே மழையே...

அடை மழைக்குள் அவள் கூந்தல் என் முகம் வருடிடுமா மழையே?
மடை இன்றி ஓடும் கண்ணீர், உன் தூரல் மறைக்குமோ மழையே?
குடை இருந்தும் தனிமையில் தினம் தவிக்கின்றேனே மழையே...
விடை எழுத மையாகி நீ அவள் மனதை நனைப்பாயோ மழையே?

~அன்புடன் கோகுலன்.