இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது." சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம் " தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும் - சிலர் கருத்து. வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம். எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம் ... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம்...
ஒரு கவிஞனின் கலைகளின் சங்கமம். A blog of a simple boy who tries to survive in the literary world.

semma machi....... 9c aaam en song intha lyric konjam use pannikava?
ReplyDeletemithun
Sorry machi can't.....!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete