Skip to main content

நண்பன்... (Friend)



பாதை தேடி பயணங்கள் போகும் நேரம்,
 வழி துணையாய் வந்தவனும் அவனே...
நிம்மதி தொலைத்து நேரம் மறந்த போது,
 துக்கத்தை நான் பகிர தூக்கத்தை தொலைத்தவனும் அவனே...

தடுக்கி வீழ்ந்து மிதிபட்ட வேளைகளில்,
 தூக்கி விட்டு தோழ் தந்தவன் அவனே,
செய்வதறியாது சிதறிய பொழுதினில்,
 சேர்த்தெடுத்து சிலையாக்கியவன் அவனே...

மழை வரும் வேளைகளில்,
 நிதம் குடைபோல் காத்தவன்,
வெயில் சுடும் காலங்களில்,
 நிழலாய் மாறியே குளிரும் தந்தவன்...

நட்புக்கு இலக்கணமல்ல அவன்,
 இதிகாசமாய் மாறியே உயர்ந்தவன் அவன்,
தோழமையின் தோழனும் அவன்,
என் உயிர் நண்பனும் அவன்தானே...

~அன்புடன் கோகுலன்.

Comments

Popular posts from this blog

துவக்கம்... (The Beginning)

இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது." சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம் " தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும் - சிலர் கருத்து. வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.  எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம் ... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம்...

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்... இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்... 5 வருடங்களுக்கு முன்பு தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் ...

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...