Skip to main content

என்ன செய்தாய் பெண்ணே?

என் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே,
உன்னைக் கண்டதாலே மனம்  திண்டாடுதே...
விழி மோகம்  கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று,
கள்ளி என்னை நீயே கொத்திச் சென்றாய் நேற்று...

தொட்டால் குற்றமில்லை தொலைத் தூரத்தில் எல்லை,
விட்டில் கூட்டத்துக்கு வித்தைகள் வேலை இல்லை..
என் இதழ் ஈரம் கொண்டு உன் முகமும் நனைக்க,
ஆசைக் கொண்டதே இன்று  மனதின் திரையும் விலக...

மோகம்  தீரவில்லை மோட்சம் அடையும் நிலை,
மாலைத் தாங்கும் வரை வேகம் ஓய்வதுமில்லை,
விண்ணைத் தொடவா அன்பே மின்னல் மறையும் முன்னே,
காற்றில் தனியாய்ப் பறந்த நாட்களும் தடமானதே...

பெண்ணே எந்தன் மனம் அலைப்பாயுதே தினமும்,
கண்ணே உந்தன் கரம் பற்றும் காலமும் வரணும்...
சாலையில் தனியாய் நடந்த காலங்களும் அன்று,
அருகில் நீயும் வரவே தனிமை தொலைந்ததே இன்று...

~அன்புடன் கோகுலன்.

Comments

  1. காதலன் உணர்வை அருமையாக
    இயல்பான மொழியில்
    சொல்லிப்போகும் கவிதை அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,
      கவிதைகள் தொடரும்...

      Delete

Post a Comment

Popular posts from this blog

துவக்கம்... (The Beginning)

இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது." சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம் " தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும் - சிலர் கருத்து. வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.  எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம் ... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம்...

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்... இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்... 5 வருடங்களுக்கு முன்பு தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் ...

ஒரு கதை...

படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே ... ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அ...