Skip to main content

நியதி!


மழையில, மலை குகைக்குள்ள,
 மறைவில, மலர் மலரயில,
மங்கையவள், மனமும் மயங்கையில,
 மாயமாக மதி மகிழுது இங்க...

விதையில, விதை நெல்லுக்குள்ள,
 விடையில்ல, விடுகதை விருட்சமாகுதிங்க,
விளங்கல, விடிவெள்ளிக்கு விளக்கமில்ல,
 விலையெல்லாம் விண்ணுக்கு விரையுதிங்க...

கண்ணுக்குள்ள, கண்ணுக்குள் கண்ணீருக்குள்ள,
 கதிரவனும், கலைக்கு கலங்கரைதானிங்க,
கள்ளியுமில்ல, கள்ளு குடிப்பவன் கள்ளனுமில்ல,
 கற்பிதக்கும் கண்ணிகள் எல்லாம் அழகுமில்ல...

உண்மையுமில்ல, உக்கிரத்தால ஒண்ணுமேயில்ல,
 உகரமிங்க, உகாந்தமாகுது இங்க,
உசுப்பிவிட்டு உசாவயில உசிர் ஊசலாடிடுமங்க,
 கடைசியில உடலும் உலகத்துக்குள்ள உடைந்திடுமிங்க...

~அன்புடன் கோகுலன்.

Comments

Popular posts from this blog

என்ன செய்தாய் பெண்ணே?

என் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே, உன்னைக் கண்டதாலே மனம்  திண்டாடுதே... விழி மோகம்  கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று, கள்ளி என்னை நீயே கொத்திச் சென்றாய் நேற்று... தொட்டால் குற்றமில்லை தொலைத் தூரத்தில் எல்லை, விட்டில் கூட்டத்துக்கு வித்தைகள் வேலை இல்லை.. என் இதழ் ஈரம் கொண்டு உன் முகமும் நனைக்க, ஆசைக் கொண்டதே இன்று  மனதின் திரையும் விலக... மோகம்  தீரவில்லை மோட்சம் அடையும் நிலை, மாலைத் தாங்கும் வரை வேகம் ஓய்வதுமில்லை, விண்ணைத் தொடவா அன்பே மின்னல் மறையும் முன்னே, காற்றில் தனியாய்ப் பறந்த நாட்களும் தடமானதே... பெண்ணே எந்தன் மனம் அலைப்பாயுதே தினமும், கண்ணே உந்தன் கரம் பற்றும் காலமும் வரணும்... சாலையில் தனியாய் நடந்த காலங்களும் அன்று, அருகில் நீயும் வரவே தனிமை தொலைந்ததே இன்று... ~அன்புடன் கோகுலன்.

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்... இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்... 5 வருடங்களுக்கு முன்பு தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் ...