Skip to main content

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...)


தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ஆண்டுகள் சென்றது, இரண்டு வருட நினைவுகளை அவர்கள் முழுமையாகவே தொலைத்து இருந்தனர். நிஷாவின் தந்தை அவளுக்கு விபத்து ஏற்பட்டவுடனேயே அவர்களின் நிறுவனத்தின் பெங்களூர் கிளையை மூடி விட்டார், ஏனெனில் அதனால் தானே இவ்வளவு சேதாரம் என அவர் மனதுக்குள் ஒரு நினைப்பு. நிஷா ஜெர்மெனியில் உள்ள அவர்களின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த துவங்கினாள். தருண் சென்னையிலேயே பெரிய ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்தான். இவ்வாறு இருக்கையில் அவர்கள் இருவருக்கும் தங்கள் இரண்டு வருட வாழ்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பல நாட்கள் கழித்தனர்.

தருணின் வேலைகளை கண்டு தருணின் நிறுவன அதிபர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அவனுக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் அவரே... ஒரு நாள் அவர்கள் நிறுவனத்தில் ஒரு விருந்துபச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகவும் பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அங்கு அந்த நிறுவனத்தின் அதிபர் மகளும் வந்திருந்தாள். விருந்துபச்சாரத்தின் நடுப்பகுதியில், "அன்புக்குரியவர்களே, இன்று இங்கு வந்திருக்கும் எல்லாருக்கும் ஓர் சந்தோசமான விடயம் சொல்ல போகிறேன் அது வேறொன்றுமில்லை என் மகள் இனியாவின் திருமணத்தை பற்றிய அறிவிப்பு மாப்பிள்ளை வேற யாருமில்லை உங்களுக்கெல்லாம் மிகவும் பரிட்சியமானவர் தான், தருண்!!!" என்றார் நிறுவனத்தின் அதிபர். குழப்பத்துடன் அவர் அருகே சென்றான் தருண், அருகில் சென்று அதை ஏற்றுக் கொண்டான். கல்யாண வேலைகள் தடபுடலாக ஆரம்பமானது...

ஜெர்மனியில், நிஷாவின் நிறுவனம் அதிக லாபங்கள் ஈட்ட தொடங்கியது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பலருக்கு சந்தோசம் பலருக்கு பொறாமை, நிஷா தன் தந்தையிடம் சென்று, "அப்பா, நம்ம நிறுவனத்தின் கிளை ஒன்றை இந்தியாவுல தொடங்கலாமே, உங்களுக்கு தான் பெங்களூருல நிறைய பெற தெரியுமே..." என்றாள், அதை கேட்டு திணறிப்போன நிஷாவின் தந்தை "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை" என்றார் கோபத்துடன், "இல்லப்பா நல்ல வருமானம் வரும்" என கூறி நச்சரித்தாள், அவர் முடியவே முடியாதென கூறி விட்டார். காரணம் கேட்டு நிஷா அவரை குடைந்தெடுத்தாள், அவளை சமாளிக்க முடியாத கட்டத்தில், "பெங்களூர்ல தாம்மா உனக்கு விபத்தாச்சு அதான் வேண்டாம்னு சொல்றேன்ம்மா" என்றார். "இத ஏன்பா முதல்லயே சொல்லல எனக்கு என்ன நடந்துச்சின்னு நான் தெரிஞ்சுக்கணும் தானேப்பா" அழுகையுடன். "இல்லமா உன்னை ஏன் சங்கடத்துல ஆழ்த்துவோம்னு தான் சொல்லலமா", "சரிப்பா நான் இந்தியா போக போறேன் எனக்கு என்ன அந்த இரண்டு வருஷமா நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கப் போறேன்" என்றாள், அவளின் தந்தை எவ்வளவோ தடுத்தும் இந்தியா போவதில் அவள் உறுதியாகவே இருந்தாள், வேறு வழியின்றி அவர் அவளின் கோரிக்கைக்கு உடன் பட்டார், மறுநாள் நிஷா இந்தியாவுக்கு பயணமானாள்.

அதே நேரம் சென்னையில்,
"அண்ணா உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்" என்றாள் தருணின் தங்கை, "என்னமா சொல்லு" தருண் அன்புடன், " அண்ணா இந்த விஷயத்தை நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும் இல்லாட்டி என்னைக்கோ ஒரு நாளைக்கு நீங்க கவலை படக்கூடம்" என்று கூறியவள் மேலும் தொடர்ந்தாள் " நீங்க உங்களுக்கு என்ன நடந்துச்சின்னு கேட்டு பல முறை அம்மா,அப்பாவ நச்சரிச்சிருக்கிங்க தானே? நீங்க பெங்களூருல தான் இரண்டு வருஷம் இருந்திங்க அங்க ஒருத்தவங்கள காதலிச்சும் இருந்திங்க அவங்கள கூட்டிக்கிட்டு நீங்க இங்க வரும் போது தான் உங்களுக்கு அந்த விபத்து ஆச்சு" இதை கேடு அதிர்ச்சி அடைந்தான் தருண்,  "இத ஏன் இவ்வளவு காலம் என்கிட்ட சொல்லல?", "இல்லை அண்ணா அம்மாவுக்கு இந்த விஷயம் புடிக்கல அதன் சொல்ல வேண்டாம் என்றாங்க, நீங்க காதலிச்சவங்க பற்றி எங்களுக்கு ஒன்னும் தெரியாது அவங்க பெங்களூருனு மட்டும் தான் தெரியும், அங்க போனிங்கனா மிச்சம் எல்லாம் உங்களுக்கே தெரியவரும்" என்றாள் அமைதியாக... கோபம் கொண்டவனாய் எழுந்தவன், தன் தாய் தந்தையை ஏசிவிட்டு கல்யாண வேலையை நிறுத்தினான். அவன் வேலை செய்த நிறுவனத்தின் அதிபரை கண்டு நடந்ததை கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டான். அவர் அவனுக்கு ஆசி கூறி விடைபெற்றார், கல்யாண வேலைகள் நின்றது, தான் பெங்களூரு கிளம்புவதாக வீட்டில் கூறினான், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனால் தருணின் அம்மா,"நீ அவளை கண்டுபிடிக்காட்டி நீ இங்க எப்ப வாரியோ அன்று உனக்கு கல்யாணம் - நான் காட்டுற பொண்ணு கூட இதுக்கு ஒத்துகிறதுன இப்ப போ"என்றார், கேலி சிரிப்புடன் "அம்மா என் காதல் உண்மை, நான் என்னைக்கும் பொய்யா ஒருத்திய காதலிச்சிருக்க மாட்டேன் அது உங்களுக்கு தெரியும், நாங்க கட்டாயம் ஒன்னு சேருவோம்" என கூறியவன் பெங்களூருக்கு கிளம்பினான்.

பெங்களூரு,
நினைவுகளை இழந்து தவித்து வந்திருக்கும் இரு பறவைகளுக்கு அவர்களின் கனவுகளை நிஜமாக்கிடுமா? தொடருவோம்...

இருவரும் ஒரே நாள் ஆனால் வேறு வேறு விதமாக பெங்களூரு வந்தடைந்தனர், மனதில் குழப்பம்,சலசலப்பு, தயக்கம், பயம் என்றவாறு பல வித உணர்வுகளுடன் பெங்களூரில் தங்கள் நினைவுகளை தேடும் பணியை துவங்கினர், வெவ்வேறு பாதைகள் பலரை சந்தித்தனர் எவரிடமும் தகுந்த விடையில்லை, நிஷாவின் நிறுவனத்தில் வேலை செய்த எவரும் இப்போது பெங்களூரில் இல்லை அவர்கள் எல்லோரும் வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் நிறுவனம் மூடியவுடன் அவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர், பலரும் நிறுவனம் சடுதியாக மூடப்பட்டதால் அவளின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர் ஆகவே அவர்கள் நிஷாவுக்கு பதில் கூறிவிட விரும்பவில்லை...

தருண் தான் தங்கியிருந்த இடம் பழைய நண்பர்கள் என தேடினான் அவன் வேலை செய்த நிறுவனம் மூடப்பட்டு 3 வருடம் போனதை மட்டுமே கூறினார்களே தவிர அவன் காதலித்து எவருக்கும் தெரியவில்லை, காரணம் அவன் அந்த விஷயத்தை எவரிடமும் கூறவில்லை மறைத்திருந்தான், ஒரு நாள் மாலை நேரம் தருண் தேநீர் அருந்த ஒரு உணவுச்சாலைக்கு சென்றிருந்தான், அவன் குழப்பத்தில் மூழ்கியவனாக தேநீர் அருந்திவிட்டு எழுந்தான் அப்போது வேறொருவருக்காக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த தேநீர் தட்டுபட்டு அருகில் இருந்தவர் மேல் கொட்டியது, கோபத்துடன் எழுந்தாள் நிஷா!!!!, " கண்ணு தெரியலையா எங்க பாத்துகிட்டு எழும்புனிங்க?" தருண் திரும்பி நிஷாவை கண்டான் கத்தியவள் அமைதியானாள் "உங்களை எனக்கு தெரியுமா?" என்றாள், தருணுக்கும் எங்கேயோ கண்ட ஞாபகம்," இல்லையே, எனக்கும் உங்களை எங்கையோ கண்ட ஞாபகம் என்றான்.." உடனே நிஷா (மனதுள் :தெரியலைனா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே பொறுக்கி எங்கையோ கண்டு இருக்காறாம் கொஞ்சம் சிரிச்சா போதுமே உடனே பல்ல காட்டிற வேண்டியது) " இல்லை பரவாயில்லை நான் கிளம்புறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள், அவள் வெளியே செல்ல அவளை பின்தொடர்ந்தான் தருண்...

அவள் பின்னே திரும்பி பார்க்கும் போது அவன் பின் தொடர்ந்து வருவது அவளுக்கு தெரிந்தது, அவள் அவனை பார்த்த படியே சென்றாள், மிக பெரிய அலறல் அவள் தூக்கி வீசப்பட்டு வீழ்ந்தாள், இரண்டு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன, பெங்களூரு கண்ட மிகப் பெரிய விபத்துகளில் ஒன்று அது, அந்த விபத்தில் சற்றே காயப்பட்டு பிழைத்தவன் அவள் அருகே ஓடி அவளை தூக்கி கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான்...

பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்...

இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள். நிஷாவுக்கு நினைவு திரும்பவில்லை தருண் அவள் அருகேயே இருந்தான் அவள் தந்தைக்கு செய்தி அனுப்பி இருந்தான், அவர் வந்தவுடன் அவரிடம் அவளை விட்டுவிட்டு அவன் கிளம்பினான். அவர் அவளை ஜெர்மெனிக்கு கொண்டு சென்றார், தருண் நடந்த நிகழ்ச்சியை நினைத்து மிகவும் நொந்தான், தன் பிழையால் தானே இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று கவலையடைந்தான்.. நாட்கள் உருண்டது எந்த நினைவுகளும் அவனுக்கு வரவில்லை, மாதங்கள் போனது குழப்பத்திலேயே வாழ்ந்திருந்தான் அவனுக்கு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது, அவன் அம்மா "உனக்கு குடுத்த காலம் முடிஞ்சுருச்சு கண்ணா இன்னும் எவ்வளவு காலம் தான் யாருனே தெரியாதவளை தேடுவ? சீக்கிரம் வா!" அதற்கு தருண் கண்கலங்கியவனாய் "உங்க விருப்பப்படியே நடந்துருச்சு, சரி உங்க விருப்பப்படியே கல்யாணத்துக்கு தயார் பண்ணுங்க" என்றான். "நான் அடுத்த 25 வந்துருவேன் இன்னும் இரண்டு கிழமை இருக்கு நான் வார அன்னைக்கே கல்யாணத்தை வைச்சுக்கலாம்" என கூறி அழைப்பை துண்டித்தான்.

25ம் திகதி தருணுக்கு தடபுடலாக கல்யாணம் ஏற்பாடாகியிருந்தது வீடு போய் சேர்ந்தவன், மணமகன் கோலத்தில் மணமேடைக்கு சென்றமர்ந்தான், ஏறியவன் தலை குனிந்தபடியே இருந்தான், அவள் அருகே மணமகள் வந்தமர்ந்தாள் அவன் அருகே அமர்திருந்தவள் தருணின் படமொன்றை அவன் காலருகே வைத்தாள், அதை கண்ட தருண் அந்த படத்தை எடுத்தான், அது மடிக்கப்பட்டு இருந்தது அதை விரித்தான் அதில் அவனருகே ஒரு பெண்... அவனால் அன்று விபத்தில் சிக்கிய பெண்... ஆச்சரியத்துடன் மணப்பெண்ணை பார்த்தான் அங்கே நிஷா அமர்ந்திருந்தாள், அவன் கண்களில் கண்ணீர் அதை துடைத்த நிஷா நான் தான் உங்க நிஷா, நீங்க விரட்டி விரட்டி காதலித்த உங்க நிஷா!" (அன்று விபத்து ஏற்பட்டு அவள் ஜெர்மெனிக்கு கொண்டு சென்றபின் நினைவு திரும்பிய வேளையில் அவளுக்கு பழைய நினைவுகளும் திரும்பியிருந்தது உடனே அவள் தந்தையிடம் கூறி தருண் வீட்டை கண்டறிந்து அவனுக்கு தெரியாமலேயே அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுப்போம் என முடிவெடுத்தவளாய் கல்யாண வேலைகளை செய்தாள் அதன் விளைவே இன்று தருணின் திருமணம்.) என கூறிவிட்டு தருணை அணைத்து மணமேடையிலேயே அவனை முத்தமிட்டாள்.

அவர்கள் காதல் கைகூடியது, எல்லோரும் வாழ்த்த  அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தது, தருணுக்கு அவன் முதல் குழந்தை பிறந்த போது பழைய ஞாபகங்கள் வந்து சேர்ந்தது, அந்நாள் அவன் மிகவும் சந்தோஷமடைந்தான்...


"காதல் உண்மையுள்ளங்களை என்றுமே பிரித்து விடுவதில்லை,
உயிருக்குள் உறவாகவே இணைத்துவிடும்
..."

~அன்புடன் கோகுலன்.

Comments

Popular posts from this blog

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் புள்ள, முத

En kaneer Sonna Kavithai!