கண்மூடி கனவை தொட்டு விளையாடு,
மலை குருவியாய் மழைக்குள் குளித்துவிடு,
செந்தேனே நீயும் மலரிடம் மௌனம் கற்றுவிடு,
இசை மீட்டி தமிழையும் திசை எங்கும் பரப்பிவிடு...
துள்ளி திரியும் காற்றே தாய் மொழியால் அழகாக்கிடவா?
மின்னல் கொண்டு மாலை கோர்த்து உனக்கு சூடிடவா?
கொடும் பனியில் என் இதயத்தை நானும் புதைத்திடவா?
என் இதழ் கொண்டு உன் இதழ் தினம் நிதம் நனைத்திடவா?
புல்மீது பூத்த பனித்துளியே,
சூரியனாய் நானும் உன்னை எனக்குள் ஈர்க்கவா?
புன்னைகையால் என்னை நீ சிதைக்கையில்,
இடைமீது நானும் கரம் கொண்டு விடைதேடவா?
அந்தி நேர தென்றலில் ஆற்றங்கரை மணலில்
உன் பாதம் தேடி அலையச் செய்தாய்...
மனம் காதலுடன் கை குலுக்கி கவிதையால் பெயரெழுதி,
காத்திருக்க இன்று நீ பழக்கி விட்டாய்...
~அன்புடன் கோகுலன்.
ம்... அழகிய கவிதை
ReplyDeleteநன்றி நண்பா!!!
ReplyDelete