Skip to main content

உன்னால் மயங்கினேன்...

என் தோழியே.. என் தோழில் சாய்ந்துவிடு,
 கண் மூடியே... கனவுகள் காண்போம் வந்துவிடு,
விண் நாடியே... விரைவோமா? சம்மதித்திடு,
 பெண் ராணியே... என் விரல்களுக்குள் உன் விரல்கள் சேர்த்துவிடு...

வயதிருக்கு நமக்கு வாழ்ந்திடவே வழிகள் திறந்தே இருக்கு,
 கொய்து நீ சென்ற என் இதயம் வாழ்த்திட உன் உயிரும் இருக்கு,
பெய்து நின்ற இம்மழையில் நனைந்து, காய்ந்தே என் உடலுமிருக்கு,
 ஆய்ந்து விட்ட என் உயிர் திரும்பிடாத உன் கடனுமிருக்கு...

கண் முழுதும் உன் நினைவுகள் ரேகையாய் மாறுதே,
 என் தேகம் உன் உதட்டின் ஈரம் பட்டுக் குளிர்ந்துப் போனதே,
மண் முழுதும் படரும் உன் நிழலில் குடிப்புகுந்திட என் உயிர் ஏங்குதே,
 மின் பாய்ந்த மரமாய் உன் பார்வையால் என் உதிரமெல்லாம் கருகியதே...

தன்னந்தனியாய் பேசி தவிக்கும் இந்நாட்கள்,
 வெட்டவெளியில் பட்ட மரமாய் பட்டுப் போன வார்த்தைகள்,
தொட்டுப் போவாயா என சுடுபட்டுப் போய் காத்திருக்கும் காலங்கள்,
 என்று தான் என்னை விட்டு மறையுமோ?
நீ இன்றியே இந்த உலகும் மாயமோ?
 உன் நினைவே இறுதியில் என்னை மாய்க்குமோ?

~அன்புடன் கோகுலன்.

Comments

Popular posts from this blog

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் புள்ள, முத

En kaneer Sonna Kavithai!

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...) தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ஆண்டுகள் சென்றது, இரண்டு வருட நினைவுகளை அவர்கள் முழுமையாகவே தொலைத்து இருந்தனர். நிஷாவின் தந்தை அவளுக்கு விபத்து ஏற்பட்டவுடனேயே அவர்களின் நிறுவனத்தின் பெங்களூர் கிளையை மூடி விட்டார், ஏனெனில் அதனால் தானே இவ்வளவு சேதாரம் என அவர் மனதுக்குள் ஒரு நினைப்பு. நிஷா ஜெர்மெனியில் உள்ள அவர்களின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த துவங்கினாள். தருண் சென்னையிலேயே பெரிய ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்தான். இவ்வாறு இருக்கையில் அவர்கள் இருவருக்கும் தங்கள் இரண்டு வருட வாழ்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பல நாட்கள் கழித்தனர். தருணின் வேலைகளை கண்டு தருணின் நிறுவன அதிபர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அவனுக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் அவரே... ஒரு நாள் அவர்கள் நிறுவனத்தில் ஒரு விருந்துபச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகவும் பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அங்கு அந்த நிறுவனத்தின் அதிபர்