Skip to main content

எப்போதடி உணர்வாய்?

இதயமே இடையிலே இடைவெளிவிட்டுதான் துடிக்கிறதோ?
இரவிலே இமைக்குள்ளே உன் நினைவுகள் நனைக்கிறதோ?
இரு விழிகளே உன் இதழிலே என் உயிர் சமர்ப்பிக்குதோ?
இளமையோ இரு நொடியிலே நீ இன்றேல் முடியுதோ?

போதை மறந்து கிளியே புத்தனாய் நானும்,
பேதை போல் போதி மரம் தேடினேன் தினமும்,
பாதை மறந்து பயனிக்குதோ என் மனமும்,
சீதை இன்றேல் என்னாகும் இராமனின் கனவும்?

கொத்தும் தேளை அரவணைக்கும் என் மனமும் - இரவில்
கத்துதே காற்று வருடுகையில் தினமும்...
முத்துப் போல் மூழ்கியெடுத்தக் காதலும் - சடுதியில்
சத்தமின்றி போன மாயம் தான் விளங்கனும்...

கண் மூடுகையில் இருந்த நீ, கண் திறக்கவே மறைந்தாய்,
விண் சென்று தேடியும் கிடைக்கவில்லை எங்கே நீ தொலைந்தாய்?
என் கண்மணியே உன் வலியை ஏனடி மறைத்தாய்?
மண் இருக்கும் வரை என் காதல் அழியாது எப்போது அதை உணர்வாய்?

~அன்புடன் கோகுலன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...

En kaneer Sonna Kavithai!

ஒரு கதை...

படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே ... ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அ...