Skip to main content

Posts

தரித்திருக்கிறேன்... தனித்திருக்கிறேன்... தவித்திருக்கிறேன்...

இதயங்கள் தடுமாறும் தடம்மாறி வழி தேடும் விடை இன்றி வினா கூடும் கனவுகள் அலைந்தோடும் காதலும் கசந்திடும் கல் தட்டி தீட்டிடும் சிலை(யின்) கண்கள்  என்னாகும்...? மணி குயில் வெட்கத்தில்  மனமிங்கு திகைத்து நிற்க மலைக்குள்ளே ஒரு கிளியும் மயங்கி தான் மரணிக்க மன்னிப்பாயா? என்னை, என நானும் மதில் மேல் பூனையாய் - ஏனடி? மதி முடங்கி நிற்க... கண் திறந்தேன் கனவில்லை இன்று, விண் தொட எண்ணி தோற்றே உடைந்து, மண் தொட்டு வீழ்ந்த பிணமாய் வெந்து, பெண் அவள் விட்டு கண்ணீரில் நனைந்து, புன் பட்டு அலைந்தே வீழ்ந்து, பன் பட்டே மரமாய் எழுந்து.... உன் சொல்லால் கலங்கி கவிழுதோ என் இதயமே.... காலை உன்னை பார்க்க விளிக்கும் கண்களும், சாலை கண்டு உனக்காய் தேங்கும், மாலை வரை காத்திருந்தே ஏங்கும், பாலை நிலத்தில் வீழ்ந்த புழுவாய் வாடும்.... ~அன்புடன் கோகுலன்

எப்போதடி உணர்வாய்?

இதயமே இடையிலே இடைவெளிவிட்டுதான் துடிக்கிறதோ? இரவிலே இமைக்குள்ளே உன் நினைவுகள் நனைக்கிறதோ? இரு விழிகளே உன் இதழிலே என் உயிர் சமர்ப்பிக்குதோ? இளமையோ இரு நொடியிலே நீ இன்றேல் முடியுதோ? போதை மறந்து கிளியே புத்தனாய் நானும், பேதை போல் போதி மரம் தேடினேன் தினமும், பாதை மறந்து பயனிக்குதோ என் மனமும், சீதை இன்றேல் என்னாகும் இராமனின் கனவும்? கொத்தும் தேளை அரவணைக்கும் என் மனமும் - இரவில் கத்துதே காற்று வருடுகையில் தினமும்... முத்துப் போல் மூழ்கியெடுத்தக் காதலும் - சடுதியில் சத்தமின்றி போன மாயம் தான் விளங்கனும்... கண் மூடுகையில் இருந்த நீ, கண் திறக்கவே மறைந்தாய், விண் சென்று தேடியும் கிடைக்கவில்லை எங்கே நீ தொலைந்தாய்? என் கண்மணியே உன் வலியை ஏனடி மறைத்தாய்? மண் இருக்கும் வரை என் காதல் அழியாது எப்போது அதை உணர்வாய்? ~அன்புடன் கோகுலன்.

மழையே ...

என்னை கொஞ்சி நனைத்திடும் மழையே, கோடையில் இன்று என்னை கட்டியணைத்திடும் மழையே , வாடையில் கோடி பூப்பூத்தாட் போல் பூத்தாயே மழையே, தாடை ஓரம் வழியும் நீரில் என் உணர்வும் கரையுமோ மழையே... கரும் கட்டழகி கண்கசக்கி தோன்றினாயோ மழையே? வெறும் தரை காய்கிறதே என மண்ணில் வீழ்ந்தாயோ மழையே? சிறு தூரல் கொண்டு கண்ணம் முத்தமிட்டாயோ மழையே? - அதில் மறுபுறம் என் உடலையும் குளிரச் செய்தாயே மழையே... தொடுவானம் இருந்து என்னை தொட்டாயே மழையே, தொடுதூரம்  இல்லை, இருந்தும் என்னை விட்டாயா மழையே? தொலைதூரத்தில் அவள், நனைக்காதே மழையே, தொலைக்கவில்லை அவளை, நனைந்தாள் நான் கரைவேனே மழையே... அடை மழைக்குள் அவள் கூந்தல் என் முகம் வருடிடுமா மழையே? மடை இன்றி ஓடும் கண்ணீர், உன் தூரல் மறைக்குமோ மழையே? குடை இருந்தும் தனிமையில் தினம் தவிக்கின்றேனே மழையே... விடை எழுத மையாகி நீ அவள் மனதை நனைப்பாயோ மழையே? ~அன்புடன் கோகுலன்.

அழகின் மாயம்

உன் கண்கள் கண்டதும் ஏற்பட்ட மயக்கம்,  என் உள்ளத்துள் நான் உணர்ந்த நடுக்கம், வெண் முகிலுக்குள் ஏற்பட்ட அந்த கலக்கம்,  என் காதல் சொல்ல வழியின்றி தவித்த தயக்கம்... உன்னுடன் பல ஜென்மம் நான் வாழ்ந்த நெருக்கம்,  என்னுடன் புதிதாய் இன்று பூத்திருக்கும் வெட்கம், மண்ணுடன் நான் வாழும் இக்காலம் இனி சுவர்க்கம்,  மானுடன் என் வாழ்க்கையில் வீசிய புது மகரந்தம்... என் விழிக்குள் இன்று நான் செதுக்கிய உன் சிற்பம்,  இங்கு கல் பட்டும் நொறுங்கிடாத கண்ணாடி இதயம், பெண் கண்டு விறைத்திருந்தும் ஏதோ சிறு வெப்பம்,  அங்கு பாலைநிலத்தில் நான் தொலைத்துவிட்ட தடயம்.. உன் பெயர் எழுத்துக் கூட்டி எழுதவே தோன்றிடும் கவிதையும்,  பெண் நீ என் கண்ணுள் சிக்கியதால் ஏற்பட்ட இம்மாற்றமும், மண் உலகம் நான் விட்டு விண்ணுலகம் வென்றிட இன்று வித்திடும்,  உன்  ஞாபகங்களும் இனி என் வாழ்கையை அழகாய் சிதைத்தே செதுக்கிடும்... ~அன்புடன் கோகுலன்.

உன்னால் மயங்கினேன்...

என் தோழியே.. என் தோழில் சாய்ந்துவிடு,  கண் மூடியே... கனவுகள் காண்போம் வந்துவிடு, விண் நாடியே... விரைவோமா? சம்மதித்திடு,  பெண் ராணியே... என் விரல்களுக்குள் உன் விரல்கள் சேர்த்துவிடு... வயதிருக்கு நமக்கு வாழ்ந்திடவே வழிகள் திறந்தே இருக்கு,  கொய்து நீ சென்ற என் இதயம் வாழ்த்திட உன் உயிரும் இருக்கு, பெய்து நின்ற இம்மழையில் நனைந்து, காய்ந்தே என் உடலுமிருக்கு,  ஆய்ந்து விட்ட என் உயிர் திரும்பிடாத உன் கடனுமிருக்கு... கண் முழுதும் உன் நினைவுகள் ரேகையாய் மாறுதே,  என் தேகம் உன் உதட்டின் ஈரம் பட்டுக் குளிர்ந்துப் போனதே, மண் முழுதும் படரும் உன் நிழலில் குடிப்புகுந்திட என் உயிர் ஏங்குதே,  மின் பாய்ந்த மரமாய் உன் பார்வையால் என் உதிரமெல்லாம் கருகியதே... தன்னந்தனியாய் பேசி தவிக்கும் இந்நாட்கள்,  வெட்டவெளியில் பட்ட மரமாய் பட்டுப் போன வார்த்தைகள், தொட்டுப் போவாயா என சுடுபட்டுப் போய் காத்திருக்கும் காலங்கள்,  என்று தான் என்னை விட்டு மறையுமோ? நீ இன்றியே இந்த உலகும் மாயமோ?  உன் நினைவே இறுதியில் என்னை மாய்க்குமோ? ~அன்புடன் கோகுலன்.

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...

கத்தும் குழந்தையாய் மனமும்...

முத்துக்குள் முத்தங்கள் இடவும்,  திக்கித் திணறிடுதோ இதயம், தத்தித்  தாவித் தடுமாறித் தினமும்,  கத்தும் குழந்தையாய் கதறியே அழும், சிக்கிக் கொண்டு சிக்கல்கள் கூடும்,  தத்-தம் தருணம் திணறினால் மரணம்... பத்துக் கைவிரலும் பற்றிப் பிடிக்கும்,  சத்து இன்றி சதைதான் குறையும், சொத்து சுகம் தேடாத மனமும்,  கொத்துக் கொத்தாய் முள்ளையும் பறிக்கும், பித்துப் பிடித்து திரிய துவங்கும்,  கத்துக் குட்டியை கவலைகளும் சூழும்... நித்தம் கண்ட கனவுகள் மறையும்,  சத்தம் இன்றியே சந்தங்கள் அடங்கும், புத்தம் புதிதாய் பூத்திடும் ரோஜாவும் - என்  ரத்தம் கண்டு தலைதான் கவிழும், சித்தம் கொண்ட சித்தனாய் நானும் - இங்கு  புத்தனாய் மாறினால் வலிகளும் குறையும்... செத்துப் போகுதே மனமும் இன்று - ஏனடி என்னை  வித்தாப் பெற்றேன் உன்னிடம் காதலும் அன்று... முத்தா முடிவா மூழ்கியதால் அன்று - காதல் இனி  பத்தா(த) உண்டியாய் மாறிடும் நிலைதான் இன்று... ~அன்புடன் கோகுலன்.