இதயங்கள் தடுமாறும் தடம்மாறி வழி தேடும் விடை இன்றி வினா கூடும் கனவுகள் அலைந்தோடும் காதலும் கசந்திடும் கல் தட்டி தீட்டிடும் சிலை(யின்) கண்கள் என்னாகும்...? மணி குயில் வெட்கத்தில் மனமிங்கு திகைத்து நிற்க மலைக்குள்ளே ஒரு கிளியும் மயங்கி தான் மரணிக்க மன்னிப்பாயா? என்னை, என நானும் மதில் மேல் பூனையாய் - ஏனடி? மதி முடங்கி நிற்க... கண் திறந்தேன் கனவில்லை இன்று, விண் தொட எண்ணி தோற்றே உடைந்து, மண் தொட்டு வீழ்ந்த பிணமாய் வெந்து, பெண் அவள் விட்டு கண்ணீரில் நனைந்து, புன் பட்டு அலைந்தே வீழ்ந்து, பன் பட்டே மரமாய் எழுந்து.... உன் சொல்லால் கலங்கி கவிழுதோ என் இதயமே.... காலை உன்னை பார்க்க விளிக்கும் கண்களும், சாலை கண்டு உனக்காய் தேங்கும், மாலை வரை காத்திருந்தே ஏங்கும், பாலை நிலத்தில் வீழ்ந்த புழுவாய் வாடும்.... ~அன்புடன் கோகுலன்
ஒரு கவிஞனின் கலைகளின் சங்கமம். A blog of a simple boy who tries to survive in the literary world.