Skip to main content

Posts

Showing posts from October, 2013

இமைகளும் துடிக்குதோ...

சிலிர்க்கும் இந்த இரவுகள், தவித்து இருக்கும் இந்த தருணங்கள்,  சிரிப்பை மறந்து நிற்கும் நிமிடங்கள், தினம் நீளுதே உயிரே... கொட்டும் பனியில் இந்த கோடை வெயில் வந்து,  என்னை அள்ளிச் சென்று கோடம்பாக்கம் விட்டுச் செல்ல... உன்னைத் தேடியே நானும் ஏறும் பேருந்து கூட,  விண்ணைத் தொடும் வேகம் கொண்டு தான் பறந்து செல்ல... பேசுவாயோ கிளியே தினம் பேதையாகுறேன் தனியே,  சாலையோரம் எங்கும் என் விழிகள் உன்னைத் தேடிடும் இனியே... உன் கூந்தல் வருடிடவே, ஏங்கிடுதே எந்தன் விரல்கள்..  உன் பாதம் தொட்டு இசைத்திடவே தவித்திடுதே இந்தக் கொலுசுப் பரல்கள்... ஒரு நெஞ்சம், உயிர் காதல், உருவாகி அலைப்பாயுதே..  இரு துருவம், இணைத்தக் காதல், உருகியே அலைமோதுதே... ~அன்புடன் கோகுலன்.