கண்ணே உன் கண்கள் கண்டு காதல் மலர்ந்தது மென்மையாய், பெண்ணே உன் மௌனத்தில் மொழிகள் தேடிடும் உள்ளமாய், முன்னே நீயும் நிற்கையில் பதைபதைக்கும் தேகமாய், மண்ணே ஆறடி நிலமும் அவளின்றேல் எனக்கு ஆகிடும் உண்மையாய்... ஆசைக் கூட்டி ஆட்டம் தொடங்க, பரமபதமும் தினம் அழைக்குமே... ஆசைக் காதலும் இன்றி தனிமையில், உள்ளம் மெலிவதை உடல் உணருமே... முதல் பார்வையில் உனக்குள்ளே ஈர்த்துக்கொண்டாய், குளிர் காலத்திலும் உடலை வியர்க்கச் செய்தாய், இதயத்தில் சிரங்காய் நீயும் இன்று மாறிவிட்டாய், சுரண்டிய வலிகளுடன் வாழ வழியமைத்தாய்... காரிருள் கானகத்துள் தொலைந்தக் குழந்தையைப் போலவே, காரிகையே கருங்கூந்தளுக்குள் ஒரு மலராய் நான் வாழவே, கானல் நீரை கரும் முகிலாய் மாற்றிடும் காதலே, காற்றிலே மறைந்து கண்களுக்குள் கரைந்த காதலும் வாழ்கவே... ~அன்புடன் கோகுலன்.
ஒரு கவிஞனின் கலைகளின் சங்கமம். A blog of a simple boy who tries to survive in the literary world.