Thursday, February 7, 2013

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்...


பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்...

இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்...

5 வருடங்களுக்கு முன்பு

தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் வண்டி தரித்தது பெரும் சத்தம், அது முன்னால் வந்த ஒரு காருடன் விபத்துக்குள்ளாகியிருந்தது அரண்டவன் "என்னடா இது முதல் நாளே இப்படி ஆகிவிட்டதே" என்று நொந்து கொண்டு பஸ்ஸில் இருந்து நொந்து கொண்டு இறங்கினான். வெண்ணிற கார் ஒன்று முகப்பு நொறுங்கி கிடந்தது உள்ளே ஒரு பெண் சுயநினைவின்றி மயங்கி கிடந்தாள் யாரும் கவனிப்பாரற்று இருந்தாள் இரத்தம் ஓடி கொண்டு இருந்தது பார்த்து திகைத்தவன் ஓடிச்  சென்று அவளை தூக்கினான் அங்கு நின்றவர்கள் ஏதோ கூறினார் அவர்கள் பேசிய மொழி இவனுக்கு விளங்கவில்லை, அதை அவன் பொருட்படுத்தவும் இல்லை அவளை தூக்கி அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான். அவளை வைத்தியசாலையில் அவசர பிரிவில் சேர்த்து விட்டு அங்கு நின்று கொண்டிருந்தான். வைத்தியர் வெளியே வந்து ஓ+ குருதி தேவை என்றார், அவன் தன்னுடையதும் ஓ+ தன என கூறி குருதி வழங்க சென்றான். படுக்கையில் படுத்து குருதி வழங்கிய வண்ணம் தனது  நிலைமையை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான், "முதல் நாளே விடுமுறையா?, என்ன காரணம் சொல்வது இதை சொன்னா நம்புவார்களா? அடுத்த வேலை தேட வேண்டியது தான் போல, என்ன செய்ய எல்லாம் விதி பரவாயில்லை  ஏதோ ஓர் உயிரை காப்பாற்றியதே  பெரிய விஷயம்" என நினைத்து விட்டு குருதி எடுத்து முடிந்ததும் தன் விலாசத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

மறு நாள் என்ன நடக்குமோ என நினைத்துக்கொண்டே வேலைக்கு கிளம்பினான். நிறுவனத்தை வந்தடைந்தான் நேராக மேலாளரை பார்க்க சென்றான், உள்ளே நுழைந்தவன் வாயை திறக்கும் முன் மேலாளர்,"வாங்க தருண் எப்படி இருக்கீங்க நல்ல நேரம் நேற்று நீங்க வரல நேற்று எங்க உரிமையாளருக்கு ஒரு விபத்து ஆகவே நாங்க நிறுவனத்தை மூட வேண்டிய சூழல்" உடனே தருண் "அவர் இப்ப நல்ல இருக்காரா?", "ஒன்னும் பிரச்சனை இல்லை தருண் நல்ல இருக்காங்க,அடுத்த கிழமை வருவாங்க நீங்களே பார்ப்பிங்க தானே, சரி இது தான் உங்க வேலை பற்றிய அறிக்கை இதற்கேட்ப நீங்க வேலைகளை தொடங்கலாம் உங்க பயிற்றுவிப்பாளர்  இப்ப வைத்தியசாலையில் ஆகவே அவர் வரும் வரை கொஞ்சம் வேலை பழகுங்க வந்தவுடன் அடுத்து என்ன என்னனு பார்ப்போம்"என அவர் முடிக்க நிம்மதி பெருமூச்சி விட்டவனாய் வேலைகளை தொடங்கினான் தருண் இறைவனுக்கு நன்றி கூறியவாறு...

ஒரு கிழமைக்கு பிறகு,

தருண் அவன் நிறுவனத்தை நோக்கி வேகமாய், கோபத்துடன் சென்று கொண்டிருந்தான் அவன் கையில் ஒரு கடிதம் அதில் அவன் வேலையை  விட்டு நீக்கப்பட்டிருப்பதாக இருந்தது, ஏன் காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கினார்கள் என அவனுக்கு கோபம் நேராக மேலாளரை போய்   பார்த்தான் ஏன் இவ்வாறு ஒரு கடிதம் என கேட்டான்,அவர் தனக்கு ஒன்றும் தெரியாது சென்று  உரிமையாளரை பார்க்க சொல்லி விட்டார். கதவை அடித்து மூடிவிட்டு  உரிமையாளர் அறைக்குள் நுழைந்து கத்த தொடங்கினான், "வணக்கம் தருண்..." என கூறியவாறு கதிரை சுழன்றது, அமர்ந்து இருந்தவரை கண்டதும் அவன் வார்த்தைகள் அடங்கியது காரணம் அது ஒரு அழகிய பெண், தன்னை மறந்து கண்கள் பிளந்து நின்றான்..

"என்னை ஞாபகம் இருக்கா?" அவள் கேட்டாள், "இல்லையே, உங்கள இதற்கு முதல் கண்டதில்லையே!?!", மனதுள் "சட்டப்படி பிகருடா, கத்தி மானமே போச்சு...". "என்னா என்னை தெரியலையா இப்டி ஒரு செம்ம கட்டைய மறந்துடிங்களா?"சிரிப்புடன் அவள் முடிக்க, "உண்மையா  ஞாபகம் இல்லங்க" அசடு வழியும் சிரிப்புடன்... "நீங்க இல்லாட்டி  நான் இன்னைக்கு உயிரோடவே இல்ல தருண், நீங்க தான் அன்னைக்கு என்னை காப்பாத்துனிங்க" என அவள் கூறி முடிக்க அவனுக்கு ஞாபகம் வந்தது, அன்று அவள் முகம் இரத்தத்தால் தோய்ந்திருந்ததால் அவள் முகம் அவனுக்கு சரியாக நினைவில்லை அது மட்டுமன்றி அன்று அவன் அவளை காப்பாற்ற  வேண்டுமென  மட்டுமே போராடிக்கொண்டிருந்தான்.

பிறகு இருவரும் உரையாட தொடங்கினர் அவன் பெங்களூரில் உள்ள அவளின் நிறுவனத்தின் இன்னுமொரு கிளைக்கு மேலாளராக நியமிக்கப் பட்டிருந்தான், அதனாலேயே அவன் அங்கு வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தான் அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கவே அதை முதல் அவனிடம் அவள் கூறவில்லை. நாட்கள் ஓட தொடங்கியது அவர்கள் மிகவும் நெருங்கத்தொடங்கினர், அவர்களுக்குள் காதல் பூக்கத்தொடங்கியது...

ஒரு நாள் மாலை வேலை கடலோரம் அவர்கள் உரையாடி கொண்டிருந்தனர், யாருமே இன்றி அமைதியாக அவர்கள் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது, திடீரென அவன் கத்தினான் அவள் திகைத்தாள் அவன் கண்ணுக்குள் ஒரு எறும்பு விழுந்துவிட்டது கண்திறக்க முடியாது கஷ்டப்பட்டான், "டேய், கொஞ்சம் இருடா நான் எடுக்குறேன்"என்றாள், "போடி எரியுதுடி நீ கை வைக்காத" அவனை அடித்து விட்டு மெதுவாக அவள் கண் இமைகளை  திறந்து ஊதினாள், எறும்பு ஒரு மூலைக்கு சென்று விட்டது அவள் தன் கை விரல்களை போட பார்த்தாள் ஆனால் அவை மாசாக இருந்தது, அவன் எரியுது என குமுறிக்கொண்டு இருந்தான், அவள் அவனை அப்படியே கீழே தள்ளி, அவன் மேல் ஏறி, அவன் இமைகளை திறந்து தன் நுனி நாக்கால் அந்த இரும்பை தொட்டு எடுத்தாள்... இவன் உடல் பரவசத்தில் ஆடிப்போய் இருந்தது, அவன் இரு விழிகளும் திறந்தான் அவள் கண்களை பார்த்தான், இருவர் கண்களும் காதலால் நிறைந்திருந்தது... "நான் உன் மேல உயிரா இருக்கேன்டி" என கூறி முடிக்க அவள் அவனது உதடுகளை மெல்ல சுவைத்தாள்.

காதல் ஆனந்தநிலை பரவசத்தின் உச்சம் உலகில் பலரின் தவம் சிலரின் வரம் ஒரு சிலருக்கு யுத்தம் தருனைப் போல் அவனுக்குள்  யுத்தம்  தொடங்கியது, அவர்களின் தொடர்பு அவன் வீட்டுக்கு தெரிய வந்தது, அவர்கள் இந்த சம்பந்தத்தை விரும்பவே இல்லை அவனை கண்டித்தனர் அவனுக்கோ வேறு வழி  எதுவும் தெரியவில்லை அவன் வீட்டுக்கு சென்று அவர்களை சமாதனப்படுத்த முடிவெடுத்தான், நிஷா தானும் அவனுடன் வருவதாகக் கூறினாள், அவன் எவ்வளவோ வேணாம் என்று கூறியும் அவள் தான் வந்தே தீருவேன் என அடம்பிடித்தால் வேறு வழியின்றி இவனும் அவளை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் பேரூந்தில் ஏறி சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். "நிஷா எனக்கு என்ன செய்றதுனே தெரில வீட்ல அம்மா வேணாம்னு சொல்றாங்க அவங்கள சமாலிக்கிறது தான்  பெரிய விஷயம் ஆனா நீ இல்லாம எனக்கு வாழ ஏழாது  பேசாம செத்துடலாம் போல இருக்கு" என அவன் கூறி முடிக்க அவன் வாயை அவள் அடைத்தாள். அவன் மார்பில் அவள் தலை வைத்தாள். அகோர சத்தம் பேருந்து ஒரு கல் பாறையில் பாதை விலகி சென்று மோதியது, பேருந்தில் இருந்த எல்லாரும் பிரண்டனர், இருவரும் பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டனர் அவர்கள் உடல் வேறுவேறாக பிரிந்து வீழ்ந்தது. கடுமையாக அடிபட்டது இருவருக்கும்...!

அங்கு வந்த ஊர்காரர்கள் எல்லோரையும் வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர் நிஷாவும்,தருணும் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவர் தலையிலும் பலமாக அடிபட்டு இருந்தது. இருவரும் சுயநினைவின்றி இருந்தனர். நிஷாவின் தந்தை ஜேர்மனியிலிருந்து வந்து அவளை அங்கு மருத்துவத்துக்காக அழைத்து சென்றார், தருண் சென்னையில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். இருவருக்கும் சுயநினைவில்லாமலேயே சிகிச்சை நடந்தது, கோமாவில் இருந்தனர் இருவரும்..

மூன்று மாதம் கழித்து இருவருக்கும் நினைவு திரும்பி கண் திறந்தனர் மெல்ல மெல்ல விழிகளை திறந்தனர் . இரு குடும்பத்தாருக்கும் சந்தோஷம் ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்திருந்தது அவர்கள் இருவருக்கும் கடந்த சில வருட நினைவுகள் மறந்து போய் விட்டது.

 "அம்மா எனக்கு என்ன ஆச்சு? கடைசியா நான் பரீட்சை எழுதிட்டு வந்தது தான் ஞாபகம் இருக்கு..." என தருண் கூற, அதே நேரம் ஜேர்மனியில் நிஷா "அப்பா எனக்கு சஞ்சய புடிகலன்னு உங்க கிட்ட சொன்னேன் தானே அப்பறம் ஏன் கட்டாயப் படுத்துநிங்க இப்ப பாருங்க நான் அடிப்பட்டு இங்க கிடக்குறேன்", அதற்கு நிஷாவின் தந்தை "இல்ல நிஷா நான் தான் அது அப்பவே உன் விருப்பம்னு சொல்லிட்டனே அது நடந்து கிட்டத்தட்ட 2 வருஷம் இருக்கும்மா" என கேள்வியுடன் சொல்லி முடிக்க" என்னப்பா சொல்றிங்க அப்பா இது நடந்து ரெண்டு வருஷம்னா இந்த ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சி?", அதே நேரம் சென்னையில் "சொல்லுங்கம்மா இந்த ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சு?" என்றான் தருண் குழப்பத்தில்...

தொடரும்...

~அன்புடன் கோகுலன்.

6 comments:

 1. Nice one!

  Hope it's a inspiration from "Naduvula konjam pakkaththai kanom"

  But nicely maintained flow.

  Both are met with head injury; both go to coma; Both recover at the same time, after 3 months ; and both encounter retrograde amnesia by 2 years!!! Co-incidence????


  Keep it up

  ReplyDelete
  Replies
  1. not an inspiration form that movie coz inga "booke kanom"

   fantasies happens in love stories...

   anyway thnx for the comment

   Delete