இதயமே இடையிலே இடைவெளிவிட்டுதான் துடிக்கிறதோ? இரவிலே இமைக்குள்ளே உன் நினைவுகள் நனைக்கிறதோ? இரு விழிகளே உன் இதழிலே என் உயிர் சமர்ப்பிக்குதோ? இளமையோ இரு நொடியிலே நீ இன்றேல் முடியுதோ? போதை மறந்து கிளியே புத்தனாய் நானும், பேதை போல் போதி மரம் தேடினேன் தினமும், பாதை மறந்து பயனிக்குதோ என் மனமும், சீதை இன்றேல் என்னாகும் இராமனின் கனவும்? கொத்தும் தேளை அரவணைக்கும் என் மனமும் - இரவில் கத்துதே காற்று வருடுகையில் தினமும்... முத்துப் போல் மூழ்கியெடுத்தக் காதலும் - சடுதியில் சத்தமின்றி போன மாயம் தான் விளங்கனும்... கண் மூடுகையில் இருந்த நீ, கண் திறக்கவே மறைந்தாய், விண் சென்று தேடியும் கிடைக்கவில்லை எங்கே நீ தொலைந்தாய்? என் கண்மணியே உன் வலியை ஏனடி மறைத்தாய்? மண் இருக்கும் வரை என் காதல் அழியாது எப்போது அதை உணர்வாய்? ~அன்புடன் கோகுலன்.
ஒரு கவிஞனின் கலைகளின் சங்கமம். A blog of a simple boy who tries to survive in the literary world.