விளையாடி திரிந்த என்னை விண்ணை நோக்கிப் பார்க்கச் செய்தாய், தனியாய் வாழ்ந்த என்னை தினம் உன்னால் திணறச் செய்தாய், கனவுகளோ உந்தன் நினைவின் வரங்கள், விழிக்குள் தினமும் உன் விம்பத்தின் நிழல்கள்... நான் பேசும் நொடிகளை என்னால் நீ வெறுக்கிறாய், மௌனங்கள் தழுவி என்னை நீ கொல்கிறாய், என் வலிகள் கோபங்களாய் உன்னை வாட்டுதோ? உன் கண்ணீர் என்னால் நிதம் பெருகுதோ? பேதையடி நான் மடமையுள் மூழ்கினேன், சில கணம் அதனால் என்னையே நான் வெறுக்கிறேன், பெண்ணல்ல நீ எனக்காய் பிறந்த தேவதை, உன்னை சரணடைந்து மரணிக்க இன்று விரும்பினேன்... என் கனவுகளும் ஈரம் காணுதோ, இருள் விலகியும் இமை திறக்க மறுக்குதோ, நான் செய்த தவறுகள் கோடி தான், உன்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்கும் பாவி நான்... ~அன்புடன் கோகுலன்.
ஒரு கவிஞனின் கலைகளின் சங்கமம். A blog of a simple boy who tries to survive in the literary world.