மழையில, மலை குகைக்குள்ள,
மறைவில, மலர் மலரயில,
மங்கையவள், மனமும் மயங்கையில,
மாயமாக மதி மகிழுது இங்க...
விதையில, விதை நெல்லுக்குள்ள,
விடையில்ல, விடுகதை விருட்சமாகுதிங்க,
விளங்கல, விடிவெள்ளிக்கு விளக்கமில்ல,
விலையெல்லாம் விண்ணுக்கு விரையுதிங்க...
கண்ணுக்குள்ள, கண்ணுக்குள் கண்ணீருக்குள்ள,
கதிரவனும், கலைக்கு கலங்கரைதானிங்க,
கள்ளியுமில்ல, கள்ளு குடிப்பவன் கள்ளனுமில்ல,
கற்பிதக்கும் கண்ணிகள் எல்லாம் அழகுமில்ல...
உண்மையுமில்ல, உக்கிரத்தால ஒண்ணுமேயில்ல,
உகரமிங்க, உகாந்தமாகுது இங்க,
உசுப்பிவிட்டு உசாவயில உசிர் ஊசலாடிடுமங்க,
கடைசியில உடலும் உலகத்துக்குள்ள உடைந்திடுமிங்க...
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment