மனமே மனமே மௌனம் ஏனோ?
உன் மௌனம் என் மனதின் மரணம் தானோ?
கனவுக்குள் தினமும் நான் தரிப்பது வீணோ?
கண்கள் இமைக்கையில் உயிர் கலங்குவதும் ஏனோ?
இமைகள் திறந்தது இமைக்க மறந்தது,
விழிக்குள் உன் விம்பத்தை பதுக்கிடவே,
வருஷம் கடக்குது வயதும் போகுது,
பதைபதைக்கும் பாதையும் தெளியுமோ?
இதயம் என்பது சதை தானா?
தினம் நினைவுகள் சிக்கிடும் வலை தானா?
தேகமும் கூட சடலமாகையில்,
இதயம் மட்டும் உன்னால் வாழ தவிப்பது வீணா?
நிறங்களும் இன்றி ஒரு வானவில்,
வானில் தோன்றினால் தெரியுமா?
காதலால் அவள் என்னுள் நிறைந்து விட்டாள்,
அவள் இருந்தும் இன்றி தவிக்க விட்டாள்...
~அன்புடன் கோகுலன்.
nallarukku ...
ReplyDeleteநன்றி அன்பரே!
Delete