Skip to main content

Posts

Showing posts from September, 2012

சிதறல்கள்...

1. காதல், மாதாவின் கோவிலை அல்ல,   மரணத்தின் வாசலை திறந்திடும் சாவி... 2. களைத்துப் போய் கண்ணயர்கையில், முதுகில் வலியின்றி செருகிய கொடுவாள்... துரோகம்!     3. நடந்து சென்றவனை, மிதக்க செய்யும், சந்தோசத்தின் ஒரு பகுதி... வெற்றி! 4. இனிமையான வாழ்க்கையை இடித்து செல்லும், இடிந்த வாழ்க்கையை இசைக்கச் செய்யும், பிரம்மனின் படைப்பு... பெண்! ~அன்புடன் கோகுலன்

இதயத்துள் ஓர் கனவு...

தொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி,  சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி, விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி,  உனக்காய் ஏங்கிடும் மனமும் இதுவடி... கற்பனைகள் களைந்திட கலங்கிடும் கண்களடி,  வேதனையின் விளிம்பையும் தொட்டுணர்ந்த மனமடி, வெந்திடும் நொடிகளிலும் உன்னை சிந்தித்தேன் நிதமடி,  கடலுக்குள் தொலைந்த கப்பலாய் கரைதேடுகிறேன் தினமடி... பனி காலம் கூட தேகம் முழுதும் வியர்க்குதடி,  கோடையில் கூட உடல் எங்கும் குளிருதடி, தேகம் கூட உந்தன் நினைப்பால்,  தினமும் மெலிந்து சிதைந்து நொறுங்குதடி... உன்னை கரங்களுக்குள் கட்டிட என் விரல்களும் தவிக்குதடி,  உன் தடங்களில் நடந்திட என் பாதங்களும் விரையுதடி, விண்மீனும் பெண் பூவாய் உருவானதேனடி?  உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...! ~அன்புடன் கோகுலன்.

நண்பன்... (Friend)

பாதை தேடி பயணங்கள் போகும் நேரம்,  வழி துணையாய் வந்தவனும் அவனே... நிம்மதி தொலைத்து நேரம் மறந்த போது,  துக்கத்தை நான் பகிர தூக்கத்தை தொலைத்தவனும் அவனே... தடுக்கி வீழ்ந்து மிதிபட்ட வேளைகளில்,  தூக்கி விட்டு தோழ் தந்தவன் அவனே, செய்வதறியாது சிதறிய பொழுதினில்,  சேர்த்தெடுத்து சிலையாக்கியவன் அவனே... மழை வரும் வேளைகளில்,  நிதம் குடைபோல் காத்தவன், வெயில் சுடும் காலங்களில்,  நிழலாய் மாறியே குளிரும் தந்தவன்... நட்புக்கு இலக்கணமல்ல அவன்,  இதிகாசமாய் மாறியே உயர்ந்தவன் அவன், தோழமையின் தோழனும் அவன், என் உயிர் நண்பனும் அவன்தானே... ~அன்புடன் கோகுலன்.

துவக்கம்... (The Beginning)

இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது." சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம் " தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும் - சிலர் கருத்து. வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.  எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம் ... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம்...

நீ வெறுத்ததால் (Coz U Broke My Heart!)