Skip to main content

இதயத்துள் ஓர் கனவு...

தொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி,
 சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி,
விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி,
 உனக்காய் ஏங்கிடும் மனமும் இதுவடி...

கற்பனைகள் களைந்திட கலங்கிடும் கண்களடி,
 வேதனையின் விளிம்பையும் தொட்டுணர்ந்த மனமடி,
வெந்திடும் நொடிகளிலும் உன்னை சிந்தித்தேன் நிதமடி,
 கடலுக்குள் தொலைந்த கப்பலாய் கரைதேடுகிறேன் தினமடி...

பனி காலம் கூட தேகம் முழுதும் வியர்க்குதடி,
 கோடையில் கூட உடல் எங்கும் குளிருதடி,
தேகம் கூட உந்தன் நினைப்பால்,
 தினமும் மெலிந்து சிதைந்து நொறுங்குதடி...

உன்னை கரங்களுக்குள் கட்டிட என் விரல்களும் தவிக்குதடி,
 உன் தடங்களில் நடந்திட என் பாதங்களும் விரையுதடி,
விண்மீனும் பெண் பூவாய் உருவானதேனடி?
 உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...!

~அன்புடன் கோகுலன்.

Comments

Popular posts from this blog

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...

En kaneer Sonna Kavithai!

என்ன செய்தாய் பெண்ணே?

என் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே, உன்னைக் கண்டதாலே மனம்  திண்டாடுதே... விழி மோகம்  கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று, கள்ளி என்னை நீயே கொத்திச் சென்றாய் நேற்று... தொட்டால் குற்றமில்லை தொலைத் தூரத்தில் எல்லை, விட்டில் கூட்டத்துக்கு வித்தைகள் வேலை இல்லை.. என் இதழ் ஈரம் கொண்டு உன் முகமும் நனைக்க, ஆசைக் கொண்டதே இன்று  மனதின் திரையும் விலக... மோகம்  தீரவில்லை மோட்சம் அடையும் நிலை, மாலைத் தாங்கும் வரை வேகம் ஓய்வதுமில்லை, விண்ணைத் தொடவா அன்பே மின்னல் மறையும் முன்னே, காற்றில் தனியாய்ப் பறந்த நாட்களும் தடமானதே... பெண்ணே எந்தன் மனம் அலைப்பாயுதே தினமும், கண்ணே உந்தன் கரம் பற்றும் காலமும் வரணும்... சாலையில் தனியாய் நடந்த காலங்களும் அன்று, அருகில் நீயும் வரவே தனிமை தொலைந்ததே இன்று... ~அன்புடன் கோகுலன்.