என் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே,
உன்னைக் கண்டதாலே மனம் திண்டாடுதே...
விழி மோகம் கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று,
கள்ளி என்னை நீயே கொத்திச் சென்றாய் நேற்று...
தொட்டால் குற்றமில்லை தொலைத் தூரத்தில் எல்லை,
விட்டில் கூட்டத்துக்கு வித்தைகள் வேலை இல்லை..
என் இதழ் ஈரம் கொண்டு உன் முகமும் நனைக்க,
ஆசைக் கொண்டதே இன்று மனதின் திரையும் விலக...
மோகம் தீரவில்லை மோட்சம் அடையும் நிலை,
மாலைத் தாங்கும் வரை வேகம் ஓய்வதுமில்லை,
விண்ணைத் தொடவா அன்பே மின்னல் மறையும் முன்னே,
காற்றில் தனியாய்ப் பறந்த நாட்களும் தடமானதே...
பெண்ணே எந்தன் மனம் அலைப்பாயுதே தினமும்,
கண்ணே உந்தன் கரம் பற்றும் காலமும் வரணும்...
சாலையில் தனியாய் நடந்த காலங்களும் அன்று,
அருகில் நீயும் வரவே தனிமை தொலைந்ததே இன்று...
~அன்புடன் கோகுலன்.

காதலன் உணர்வை அருமையாக
ReplyDeleteஇயல்பான மொழியில்
சொல்லிப்போகும் கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா,
Deleteகவிதைகள் தொடரும்...