Friday, April 12, 2013

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர
மட்டும் நீ பறிச்சுப் போன?
கொல்லும் பார்வையாள என் உசுர
கொத்தி நீயும் பிரிச்சுப் போன...
முதல் மழை தொட்டப் பாதையில,
மண் வாசணை நெறயும் வேளையில,
ஒத்தயில உன்ன எதிர்பார்த்து,
தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச?

உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும்,
நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்...

சொல்லு புள்ள இது நியாயமா?
காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா?
வெயிலில் என் மனமும் காயுமா?
உன் நிழல் வரும்வரை தவிக்குமா?

போதும் போடி உந்தன் கல் மனசு,
சாகுதேடி தனிமையில் என் மனசு,
சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு,
சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு...

உடம்பு மெலியுதே புள்ள,
ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல...
சோலைத் தேடி உன் நெனப்புல,
புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள...

ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல,
அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல,
உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல,
இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல...

எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள,
உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் புள்ள,
முத்தம் இடும் சத்தம் கூட மறந்துருச்சே புள்ள,
சத்தியமா நீ இல்லாட்டி செத்துருவேன் புள்ள...

முகில் இல்லாத வானத்துல,
 ஊணம் கொண்ட நிலவாய் நட்சத்திரத்துக்கு மத்தியில,
நண்பர்கள் என்ன சூழ்ந்து இருந்தாலும்,
உன் நெனப்பு என் கண்கள நனைக்குதே ஏன்டி புள்ள...

தக்காளி உன் சிரிப்பு என் கனவ நிறைக்குது தினமும்,
உன்ன காண தாண்டி தினமும் தூங்குறேன் நான் பகலும்,
பத்திரமா இரு என் உயிரே,
உனக்காய் உன்ன நினைச்சு வாழும் காலமும் கொடுமையான சுகமே...

~அன்புடன் கோகுலன்.

2 comments:

  1. //சொல்லு புள்ள இது நியாயமா?
    காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா?//
    கவிஞர் கூட காயப்பட்டு விட்டார் போல ?? :P

    ReplyDelete
    Replies
    1. காயப்பட்டாள் தான் கவிதை எழுத வேண்டுமா?
      கவிதை : என் காகிதங்கள் நனைக்கும் பேனா மை இடும் கோலங்கள்...

      Delete