இடி முழங்கி வந்தத் சாரல் இன்று மௌனமானதோ,
உன் வெட்கம் அவிழ்க்க வந்த தூறல் ஒரு கணம் தரித்து நின்றதோ..
என் இளமையும் கொஞ்சம் கொஞ்சமாய் நீரில் இன்று கரைந்துப்போகுதோ,
என் எதிரினில் நீ கொஞ்சிப் பேசிடுகையில் மழை நீரும், மெல்ல வெள்ளமாகுதோ...
என் எதிரினில் நீ கொஞ்சிப் பேசிடுகையில் மழை நீரும், மெல்ல வெள்ளமாகுதோ...
தனிமையில் உன் நினைவுகள் என்னை மேகமாய் சூழுதோ,
கனவுகளாய் உன் விம்பங்கள் என் கண்களில், மின்னலாய் வந்து மறையுதோ...
கனவுகளாய் உன் விம்பங்கள் என் கண்களில், மின்னலாய் வந்து மறையுதோ...
தவிப்புகள் துளிகளாய் மாறி கடலுடன் சேருமோ,
அதில் மெதுவாய் நகரும் என் பேழையை உன் இருதயம் ஏற்க்குமோ..
அதில் மெதுவாய் நகரும் என் பேழையை உன் இருதயம் ஏற்க்குமோ..
சத்தம் இன்றி மழையில் உன் இதழ்கள் என் இதழ்களை சுவைக்காதோ,
அந்த நிமிடம் எம் கண்களும் மீன்களாய் வாழ்ந்திட துடிக்குதோ..
அந்த நிமிடம் எம் கண்களும் மீன்களாய் வாழ்ந்திட துடிக்குதோ..
இந்த கணம் உன் கண்ணீரும் கடலுடன் கலந்திட முடிவெடுத்ததோ,
அதை நான் கண்டுபிடிக்கும் வரை,
தினமும் மழையாய், காதலில் நீயும் என்னை நனைப்பாயோ...?
அதை நான் கண்டுபிடிக்கும் வரை,
தினமும் மழையாய், காதலில் நீயும் என்னை நனைப்பாயோ...?
Comments
Post a Comment