Sunday, September 9, 2012

துவக்கம்... (The Beginning)


இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது."சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம்" தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும்- சிலர் கருத்து.

வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.

 எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம்... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம் அழகிய விடயங்களை தினமும் நமக்கு ஊட்டுகிறது, அனுபவங்கள்,பழக்கங்கள்,மறக்க முடியாத நினைவுகள் பல உண்டு அனால் படிப்பு மட்டும் பெரிதாக மனதில் பதிவதில்லை இது பொதுவாக பலருக்கு உள்ள பிரச்சனை.

நாளை நண்பனிடம் கொடுத்து சற்று திருத்தி கேட்பேன் முகத்தில் ஓர் அசடு வழியும் சிரிப்புடன் வாசிப்பான். என் எழுத்து ஊக்கமளித்த முதல் நண்பன், முதல் மனிதன் என கூற முடியாது அவ்விடம் இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. எழுதுவது நல்ல பழக்கம் தன பெரிதாக எல்லாரும் எழுதிவிடுவதில்லை நானும் தான், நீ மட்டும் என்ன பெரிய எழுத்தாளனா? கேட்காதிர்கள் என் பேனா நின்று விடக்கூடும், பழக விடுங்கள், நேரம் கொடுங்கள். எங்கும் பார்த்து எழுதவில்லை மனதுக்கு தோன்றுபவை என் பேனா மை விதைக்கிறது. எவரும் மற்றவரை எளிதாகப் புகழ்ந்து விடுவதில்லை,கேலி, நகைத்தல்,நையாண்டி இலகுவாக வலிகொளிடுவது சிலருக்கு அது சில நொடி சந்தோசம் மறுபுறம் நகைக்க படுபவர் மனம் வித்தியாசமான விடயங்களை நினைக்கக் கூடும். இது பொதுவாக எவரும் யோசிப்பதில்லை. யாரையும் குறை கூறவில்லை மனதுக்கு பட்டதை சொல்கிறேன் அவ்வளவுதான்.

மனிதர்கள் வித்தியாசமானவர்கள் வித்தியாசமான பழக்கங்கள் உடையவர்கள் எல்லோரையும் இலகுவாகப் புரிந்துக் கொள்ள முடியாது. தன்னை தானே அடையாளங் கனவே பல வருடங்கள் கடக்கிறது. நான் ஞானி போல கதைப்பதாக என்ன வேண்டாம் நிச்சயம் கதைக்க மாட்டேன் இது மிகவும் எளிமையான விடயம் யாரும் புரிந்து கொள்வார்கள்.

சரி, விடயத்துக்கு வருவோம் எழுத தொடங்கியவன் பிதற்றிக் கொண்டிருக்கிறான் என நீங்கள் என்ன கூடும்.தலைப்பே இல்லாமல் எழுதத் தொடங்கினால் எல்லோரும் பிதற்றுவது உண்மைதான். என் அனுபவங்கள் சிலவற்றை இன்று எழுதுவோம் வரவேற்பை பொருது தொடரலாம் இல்லை கைவிடக்கூட நேரிடலாம். தோல்விகளை மட்டும் கண்ட மனம் இலகுவாக சளைத்துவிடாது முயற்சி தொடரும் தினமும்.

என் கவிதைகள் பற்றி எழுதுகிறேன் விரும்பினால் நீங்கள் வசிப்பதை தொடரலாம் இல்லையேல் மூடி வைத்து விட்டு விடைப்பெறலாம்.
தொடருபவருக்காக...

சுமார் 5 வருடங்களுக்கு முன்பு, 5  வருடம் தன எவ்வித மாற்றமும் இல்லை. உயர் வகுப்புக்காக புது ஊர்,புது பாடசாலை குடிப்புகுந்தேன். அந்நியனாகவே பலருக்கும் தெரிந்தேன். வேற்றுக் கிரக வாசியல்ல நானும் மனிதன் பிதற்றியது மனம் எவரும் கண்டுகொள்ளவில்லை, பக்கத்தில் நான் உட்காருவதை கூட விரும்பவில்லை சிலர், பெரும் குழப்பங்களுடன் நகர்ந்த நாட்கள்... இளமையின் முதல் நிலை, உடலில் ஹார்மோன்களின் அட்டகாசங்கள் தொடங்கிய நாட்கள், பெண்களை நோக்கி மட்டுமே மனம் அலையாய் திரண்ட நாட்கள், எவளும் திரும்பி கூட பார்க்காத நாட்கள். "இப்பொழுது மட்டும் பார்கிறார்களா?" என நீங்கள் கேட்கக் கூடும். இப்பொழுது மனம் பழகிவிட்டது ஓர் நிலைப்பாட்டுக்காக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும் மனம் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

அந்நாட்களில் தான் நாம் கண்ணாடி முன்பு மணித்தியாலங்களை தொலைத்தோம், மன்னிக்கவும் "நான்""தொலைத்தேன்", தொடரலாம்... இளமையின் திருவிளையாடல்களில் மனம் இளகிக்கொண்டு இருந்தது, எப்படி கதாநாயகனாவது...? மூளை கேள்விகளை சராமாரியாக தொடுத்துக்கொண்டு இருந்தது, முக்கியமாக பெண்களுக்கு முன்பு, எனது வகுப்பில் இருந்த சக மாணவியருக்கு முன்பு... வீரம் காட்டவோ உடலை காட்டி வசப்படுத்தவோ முடியாத நிலை சற்று வேகமாக காற்றடித்தாலே பறக்கக் கூடிய உடல் வாகுதான், என்ன செய்வதென்று கடுமையாக யோசித்தது மூளை, பௌதிகவியலில் கணக்கு செய்யக்கூட நான் அவ்வளவு யோசித்ததில்லை.

கவிதை எனும் பேரில் 2 ,3 வரிகள் கிறுக்கிப்பார்த்தேன் நண்பர் வட்டம் வழமை போல்,"எங்கு பார்த்தேழுதியது?" எனும் கேள்வியை கேட்டு கேலிச்சிரிப்புகளை தூரச் செய்தது. என் உயிர் தோழன் மட்டும் நன்றாக இருக்கிறது தொடரு என்றான், அவன் கொடுத்த அந்த ஊக்கம் என் கவிதைகள் சற்றே மெருகேறியது, அம்மா கூட கண்டுக்கொள்ளவில்லை, வழமையாக நடப்பது தானே அவருக்கு நான் படித்தால் மட்டும் போதும் 21ம் நூற்றாண்டின் இடைநிலை வகுப்பின் குடும்பத்தலைவி அவ்வளவுதான் யோசிப்பார், 5 வருடம் முன்பு இளமை வயது இப்படியும் யோசித்தது.


கவிதைகள் சாரலாகத் தூறியது, பெண்களை குறிவைத்தே எழுதப்பட்டது, அவர்களை ஈர்ப்பதற்காக செதுக்கப்பட்டது, நானும் சிறிது சிறிதாக அவர்கள் முன்புக் கதாநாயகனானேன்.கட்டம் அடித்து செய்த திட்டம் வீண் போகவில்லை.காதலுக்குள் மனம் சிக்கத் தொடங்கியது, கவிதைகளை காதலிக்கத் தொடங்கியது. அழகிய பல கவிதைகள் உருவாகின பலவற்றை சக மாணவியர் சேர்த்துக் கொண்டனர். மனம் மேகங்களுக்குள் மிதக்கத் தொடங்கியது. பேனாவின் நுனி தான் கக்கும் ஒவ்வொரு துளி மைக்கும் அழகை சேர்த்தது. எனது கவிதைக்கும் ரசிகர்கள்,ரசிகைகள் தான் அதிகம். அதிலும் சிலர் குறிப்பிடத்தக்கவர்கள் அவர்கள் பற்றி இங்கு கதைக்கக் கூடாது பிறகு பார்ப்போம். நானும் கதாநாயகனானேன், கவிதை அடையாளமிட்டது என்னை. மதிக்கப்பட்டேன் சிலரால், மிதிக்கப்பட்டேன் பலரால் ஆயினும் எழுத்து ஓயவில்லை பேனா மை திறவில்லை. 10 ரூபாய்தான் பேனை முடிந்தால் இன்னொன்று புதிதாக வாங்குவேன் என்று கூறிவிட்டு தொடர்ந்தேன். இன்றும் தொடர்கிறேன் ஓர் ஒழுங்கான அடையாளம் கிடைக்கும் வரை, என்று கிடைக்கும் என்று தெரியவில்லை அனால் கிடைக்கும் எனும் நம்பிக்கை உண்டு, கிடைக்கும் கட்டாயம் எனக் கூற ஊக்கமளிக்க ஒரு தோழன் உண்டு அவனுக்காக மட்டுமாவது என் கவிதைகள் கடைசி வரை எழுதப்படும். நேரம் சிறந்த மருந்து எல்லாவற்றுக்கும் விடை தரும் கலைக்களஞ்யம் எனக்கும் ஒரு பக்கம் வேண்டாம் ஒரு வரியாவது ஒதுக்கப் பட்டிருக்கிறதா? இருக்கும் கட்டாயம். ஓயாது என் எழுத்து, திமிரல்ல தன்னம்பிக்கை, முடியும் எனும் தன்னம்பிக்கை.

போதும்பா, எப்ப தான் முடிக்கப்போகிறாய் என நீங்கள் கூற எத்தனிக்கும் முன்பு முடித்துக்கொள்கிறேன் இப்போதைக்கு மட்டும் எழுதுவது முடியாது என் இறுதி நாடி இப்பூவுலகில் அடங்கும் வரை...

        
~அன்புடன் கோகுலன்.

9 comments:

  1. // 21ம் நூற்றாண்டின் இடைநிலை வகுப்பின் குடும்பத்தலைவி அவ்வளவுதான் யோசிப்பார், 5 வருடம் முன்பு இளமை வயது இப்படியும் யோசித்தது//

    அருமை !!!

    //சற்று வேகமாக காற்றடித்தாலே பறக்கக் கூடிய உடல் வாகுதான்//

    இந்த வசனம் எனக்கு இன்னொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது :P

    ReplyDelete
    Replies
    1. உனக்கு எது ஞாபஹம் வருதுன்னு தெரியும்!

      Delete
  2. good one brother.keep continue writing.....
    alagiya vasanangal... aangange ulla eluthu pilaigal kooda alagaga than irukindrana .....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா... எழுத்து தொடரும்...!

      Delete
  3. well done..good try..kepp on writing..:)))

    ReplyDelete
  4. இது ஒரு பரிட்சாத்த முயற்சி தான் மேருகூட்டப்பட வேண்டும்,
    எனவே தங்கள் கருத்துகளை பதிவு செய்வதன் மூலமே இன்னும் நல்ல இதுகளுக்கு வழி பிறக்கும்...

    ReplyDelete