Skip to main content

Posts

Showing posts from December, 2012

காத்திருந்த காலம்...

   மாடி 1                                                                                                                                 படி 4 மார்கழி மாத குளிர் மனதோடு ஏற்படும் சில உணர்வுகள், கண்கள் மூடி இமைகள் திறக்கும் முன் சடுதியாக ஓடிவும் நிகழ்வுகள், பெயர் கூறி கூப்பிட பயபட்டவாறு பதுங்கிக்கிடக்கும் தருணங்கள், இவை ஒரு சில இளமையின் அழகிய ...

வலி...

போற்ற தேவையில்ல கண்ணே, தூற்றாதிரு நித்தோம் முன்னே, விளையும் நிலமடி பெண்ணே, முத்து குளிக்கயில மூழ்கி செத்தனே.... பொங்கி வச்ச சோறு நான் தொடவே கசக்குது, நெஞ்சு குழிக்குள்ள ஒரு ஜீவன் தவிக்குது, ஊரு சனம் எல்லாம் நம்ம பொலப்ப பாத்து சிரிக்குது, எழும்பிட நினச்சவன ஆறடிகுள்ள அடக்குது..... சின்னஞ்சிருசு கூட என்ன கண்டா ஒதுங்குது, கட்டையில போக கூட வழியின்றி ததும்புது, மொத்ததுல நானோ என்ன சொல்லி பொலம்புறது, பேசயில கூட சத்தம் வர மறுக்குது.... கொலகுத்தோம் செஞ்சவன் கூட சந்தோசமா திரியுறான், ஒருக்க தோத்துப்புட்டு தெனமும் சாகுரனே நெதமும்.... செதறுன என்ன சேத்து வைக்க தேவல, செரகொடிஞ்ச பறவய பறக்க விட இங்க யாருமில்ல... ~அன்புடன் கோகுலன்.

அன்பே!

உன் கண்கள் கண்ட நினைவுகள்,  உன் சாலைகள்  கடந்த பொழுதுகள், உன் வீட்டினில் கழித்த நிமிடங்கள்,  தினம் தேனாய் ஊறுது அன்பே..... மனதுக்குள் காதல் பூத்த தருணங்கள்,  கனவுக்குள் உண்டான நெருக்கங்கள், விழிகளுக்குள் வரைந்த உன் விம்பங்கள்,  காலம் அது நிதம் இனிக்குது அன்பே..... சில்லிடும் தென்றலில் நடந்த நொடிகள்,  வெண்பனியில் ஒளிந்திருந்த தடவைகள், கல்மேலே தாவித் திரிந்த காலங்கள்,  நினைக்கையில் சிரிக்கிறேன் அன்பே..... பெண்ணாக பிறந்தது உன் தவறா?  நான் ஆணாக பிறந்தது என்ன சதியா? நமக்குள் காதல் வந்ததென்ன விதியா?  உண்மை நீ சொல்லடி அன்பே..... ~அன்புடன் கோகுலன்.

யாரோ அவள்?

மறைந்திருக்கும் உன் முகம் பார்க்க,  மனமோ மயிரிழையில் ஊசலாடுது, மானிடத்தின் மலைகுருவியாய்,  மங்கையவள் மாதவியாய் தோன்றியவள் அவளோ? உன் கண்கள் தினம் காக்க,  இமைகள் ஆகிட என் இருதயம் துடிக்குதே, என்னை விலகிட துடிக்கும் உன் கூந்தலுக்குள் பதுங்கிடும்,  பூவாய் மாறிட என் மனமும் தவிக்குதே... வேடங்கள் இட்டு வேடிக்கை காட்டுகிறாய்,  என் உயிரோ வேதனைக்குள் வெந்திடுத்தே, வேரோடு கொய்த மரமாக நானும்,  நீர் காண பயிர் நிலமாய் வாடினேன் தினமும்... மயிலிறகால் வருடிச்செல்லும் மாருதமாய் நீயும்,  மணிக்கணக்காய் காத்துக்கிடந்தேன் மணிக்குயிலாய் நானும், கல்போன்ற மனமோ கரைந்துவிட்ட நிலையில்,  சிறகொடிந்த பறவையாய் தவித்திருக்கிறேன் தினமும்... ~அன்புடன் கோகுலன்.

விதியா? விடுகதையா?

தீயிலே வாழ்கிறேன் மௌனத்தில் சாகிறேன், பேதையாய் திரிகிறேன் போதையை வெறுக்கிறேன், தேடல்கள் முடிகிறதே சிரசும் வலிக்கிறதே, ஆயிரம் கோடி பிழைகளும் என் கழுத்தை நெரிக்கிறதே... கடவுளை மறுத்தாலும் மறக்கவில்லை எக்கணமும், ராஜ்யங்கள் தேடியே அடங்கிவிட்டேன் இடுகாட்டிலே, மனமிங்கு தடை பல உடைத்தாலும், விடை இன்றி வாழ்கையும் வெறுக்கிறதே... கவலைகள் கானகத்துக்கு வழி காட்டும், மதி தனை விதியதும் மூடிவிடும், வேரின்றி மரம் மட்டும் என்ன செய்யும், கருகிட தனிமையில் துடித்து நிற்கும், ஏழையாய் பிறந்தாலும் மன்னனாக துடிக்கிறோம், தொடர்கதை இங்கு முடிவேது பிறகு ஏன் வருந்துகின்றோம், கோடி விளக்குகளும் இரவுகளை மாற்றுவதில்லை, மன மாரும் நேரம் எம்முயிருக்கு இப்பூமியில் இடமுமில்லை.... ~அன்புடன் கோகுலன்.

என் தோழன்...

நிழலாய் மாறியே தினமும் குடைப்பிடித்தாய் தோழா, நான் கண்கலங்கும் வேலை நீ அழுதாயே தோழா, என் தவறுகளுக்கு நீ தண்டித்துக் கொண்டாயே தோழா, நினைவுகள் என் கனவுகளில் உன் சிரிப்பை காட்டுதே தோழா.. உன் தோழில் சாய்ந்தேன் கவலைகள் மறந்திட, உன் சோற்றைப் பகிர்ந்தேன் என் பசியைப் போக்கிட, உன் வீட்டில் உறங்கினேன் உண்மைகள் பகிர்ந்திட, உன் விளக்கிலே படித்தேன் என் வாழ்க்கை விளங்கிட... நட்புக்கு இலக்கணமில்லை விளக்கிட வழிகளில்லை, விளக்கிட நான் துடித்த வேலைகளில் வலிக்குதே என் மூளை, இருளை நான் கண்டது இல்லை தோழா, என்னுடன்  என் பாதைகளில் நீ  தொடர்ந்திடும் போது... எண்ணங்கள் மேலோங்கிட செய்தவன் நீயே, அலை மோதிய என் கனவுகளை நனவாக்கியவன் நீயே, கோடிப் பேர் கொண்ட உலகத்தில் எனை நாடியவன் நீயே, உலகமே இருண்டிடும் போதும் என்னுடன் உலகை வெல்ல துடிப்பவன் நீயே... என் தோழன்... ~அன்புடன் கோகுலன்.

வேகம் குறையபோவதில்லை...

தனிமையில் வாழ்ந்திடு தரங்கெட்டு வாழ்ந்திடாதே, விதையாய் மாறிடு விருட்சமாய் வளர்ந்திடு, அமைதியாய் வாழ்ந்திடு அடங்கிட மறுத்திடு, வேகத்தை கூட்டிடு வேலையை கூட்டிடு... இளமையை புசித்திடு ரத்தத்தையும் ரசித்திடு, சித்தனாய் உயர்ந்திடு நித்திரையிலும் விழித்திடு, புத்தனாய் பொறுத்திடு யுத்தங்களையும் விரும்பிடு, வித்தகனாய் இருந்திடு விஞ்ஞானத்தையும் விளக்கிடு... தடைகளை உடைத்திடு தரிப்பதை தவிர்த்திடு, அரசனாய் வாழ துடித்திடு அடிமைத்தனம் வெறுத்திடு, தீமையை தீயிலிடு தீது செய்வாரை தீண்டாதிரு, நரகத்தில் வாழ்ந்திடு நன்மைகளை புகட்டிவிடு... வீழ்ந்திடும் ஒவ்வொரு முறையும் விழுதாய் மாறிடு, மேதையாய் மாறிடு மேகத்தையும் வீடாய் மாற்றிடு, சாலையில் வாழ்ந்தாலும் சரித்திரம் படைத்திடு, மடமைகளை மறந்திடு மனிதனாய் வாழ்ந்திடு! ~ அன்புடன் கோகுலன்.

சுவடுகள் ஒரு பார்வை!

ஒரு கதை...

படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே ... ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அ...