தனிமையில் வாழ்ந்திடு தரங்கெட்டு வாழ்ந்திடாதே,
விதையாய் மாறிடு விருட்சமாய் வளர்ந்திடு,
அமைதியாய் வாழ்ந்திடு அடங்கிட மறுத்திடு,
வேகத்தை கூட்டிடு வேலையை கூட்டிடு...
இளமையை புசித்திடு ரத்தத்தையும் ரசித்திடு,
சித்தனாய் உயர்ந்திடு நித்திரையிலும் விழித்திடு,
புத்தனாய் பொறுத்திடு யுத்தங்களையும் விரும்பிடு,
வித்தகனாய் இருந்திடு விஞ்ஞானத்தையும் விளக்கிடு...
தடைகளை உடைத்திடு தரிப்பதை தவிர்த்திடு,
அரசனாய் வாழ துடித்திடு அடிமைத்தனம் வெறுத்திடு,
தீமையை தீயிலிடு தீது செய்வாரை தீண்டாதிரு,
நரகத்தில் வாழ்ந்திடு நன்மைகளை புகட்டிவிடு...
வீழ்ந்திடும் ஒவ்வொரு முறையும் விழுதாய் மாறிடு,
மேதையாய் மாறிடு மேகத்தையும் வீடாய் மாற்றிடு,
சாலையில் வாழ்ந்தாலும் சரித்திரம் படைத்திடு,
மடமைகளை மறந்திடு மனிதனாய் வாழ்ந்திடு!

~அன்புடன் கோகுலன்.
படிப்பவர்க்குள்ளும் வேகம் கூட்டும்
ReplyDeleteவிவேகமான கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அன்பரே மேலும் என் கவிதைகளை ரசித்து தொடருவீர் என நம்புகிறேன்...
Delete