மாடி 1 படி 4
மார்கழி மாத குளிர் மனதோடு ஏற்படும் சில உணர்வுகள், கண்கள் மூடி இமைகள் திறக்கும் முன் சடுதியாக ஓடிவும் நிகழ்வுகள், பெயர் கூறி கூப்பிட பயபட்டவாறு பதுங்கிக்கிடக்கும் தருணங்கள், இவை ஒரு சில இளமையின் அழகிய நிழல்கள்.ஹரியின் வாழ்வில் நடந்தேறிய அவன் வாழ்வின் இனிமையான தருணங்கள், இளம் வயதில் அவன் சந்தித்தப் பெண்ணால் ஏற்பட்ட காதலின் அவஸ்தைகள்.
ஹரி இக்கதையின் கதாநாயகன்,கல்லூரியில் 2ம் வருட மாணவன் திடகாத்திரமான உடல்வாகு,அழகிய தோற்றத்துக்கு சொந்தக்காரன், பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒருவன்.அவன் சிரிப்பு,பேச்சுக்கு மயங்காத பெண்களே இல்லை, ஆனால் உண்மையான ஒரு காதலை கண்டிராத மனம் கொண்டவன். கண்னனுக்கேற்ற ராதையை தேடித்திரிந்தான். நேஹா, திறந்திருக்கும் கண்களின் விம்பங்களை நிரப்பிச் செல்பவள், தேவதைக்கான விளக்கத்தை தருபவள். தொடுவானத்தில் பூத்த வெண்ணிலவால் செதுக்கி சிலையாக உருவாக்கப்பட்டவள். எந்த ஆணிடமும் இலகுவில் சிக்காத அழகியப் பூங்கொத்து, ஹரி படிக்கும் அதே கல்லூரியில் 2ம் வருட மாணவி ஆனால் வேறுப் பிரிவு. காலம் இவர்கள் இருவரின் வாழ்வில் செய்த குழப்பங்களின் தொகுப்பு உங்களுக்காக செதுக்கப் போகிறேன்.
கல்லூரியில் புதியவர்களை வரவேற்கும் நிகழ்வு அதற்கான குழு நியமிப்பு கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தேர்ந்தெடுத்திருந்தது. நேஹா தனக்கு தலைமை பதவி கிடைக்கும் என எதிர்ப்பாத்திருந்தாள். அறிவிப்பாளர் உபத்தலைவர் "நேஹா கிருஷ்ணன்" என்றார் , திடுக்கிட்டாள், குழப்பத்துடன் மெதுவாக மேடைப்படி ஏறினாள். எல்லார் மனதிலும் ஒரு கேள்வி, "தலைவர்?". அறிவிப்பாளர், "இவ்வருடம் தலைமை பொறுப்பை தட்டிச் செல்பவர்" ஓர் அமைதி "ஹர்ஷன் ராம்", ஹரி ஒரு புன்சிரிப்புடன் எழுந்தான் மேடையை நோக்கி நடந்துவந்தான். நேஹா குனிந்த தலை நிமிர்ந்தாள், அவள் விழிகளை ஹரியின் முகம் ஆண்டுக்கொண்டிருந்தது. அவள் இதழ்கள் ஆச்சரியத்துடன் திறந்தது. அவன் அவளை நோக்கி வந்து அவளை வாழ்த்தக் கைகொடுத்தான் அவளும் கைகுலுக்கிவிட்டு கையெடுத்தாள். இருவரின் உடல்களுக்குள் ஏற்பட்ட அந்த முதல் ஸ்பரிசம் காதலை உதிக்கச் செய்தது. இருவரும் ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்துப் போவதாக உணர்ந்தனர் முதல் பார்வை, முதல் காதல் இருவர் மனதிலும் உருவானது. கல்லூரி நாட்கள் அவர்களை முகவும் நெருக்கமாக்கியது. மிகவும் நெருங்கிய நண்பர்களானார்கள், அந்தக் காதலர்கள். அவள் கொண்டு வரும் மதிய உணவை அவன் ஊட்டிவிட உண்டு மகிந்தாள். ஹரி அணியும் ஆடைகள் அவள் விருப்பப்படி அமைந்திருந்தது. அவளது இதயம் முழுவதும் அவன் உருவம், அவளை உலுக்கி எடுத்து.
ஹரி பேசும் வார்த்தைகள் கவிதையாக உருமாறியது. அவன் பாடும் பாடல்கள் காதலைப் போற்றிடத் துவங்கியது. இசையில் ஏற்கனவே ஆர்வம் உள்ள அவன் அவளுக்காக பாடலும் இயற்றியிருந்தான். நாட்கள் கடந்தது நெருக்கமான உறவுகள் காதலைத் தம்முள் ஆழப்புதைத்துக்கொண்டனர். உறக்கமில்லாத இரவுகள்,செல்லிடத்துள் புதைந்த மௌனங்கள்,சிரிக்கையில் இனித்திடும் நொடிகள், அவளைப் பார்க்க ஓடிவரும் வைகரைப் பொழுதுகள், பிரிந்து செல்லும் போது ஏற்படும் வலிகள் என காலம் அவர்களின் வாழ்கையைக் கவிதைகள் ஆக்கியது. செந்தேனை வார்த்திடும் அந்நாட்கள் ஒரு மெல்லிசையை மீட்டியது.
பூங்காற்றைக் கூட ரசித்து வாழ்ந்தன அந்தக் காதல் பறவைகள், ஹரியின் கைகோர்த்து நேஹா நடக்கையில் உலகத்தை இருவருமே மறந்தனர் அவளைத் தொடும் பொது அவன் உடல் சிலிர்த்திடவே தொடங்கியது. அவன் காதலைச் சொன்ன நாள் ஜூன் 7, அன்று காலையிலேயே கல்லூரியை அடைந்தான். அவள் வரும் வரை காத்திருந்தான் வெள்ளை சுடிதாரில் தேவதைப்போல் அவள் வந்தால். மெதுவாக அவன் முன் வந்து புன்னகையால் அவனைக் கைதுச் செய்தாள். அவள் முன் ஹரி மண்டியிட்டான்,அவன் திட்டப்படி அவன் நண்பர்கள் இசைமீட்டிடத் தொடங்கினர், வலக்கையில் அவன் வைத்திருந்த ரோஜாவை அவள் முன் நீட்டி , என் வாழ்க்கையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறாயா? என்றான், கண்களில் கண்ணீர் சொட்ட அவனைக்கட்டியணைத்து, அவன் இதழ்களை நனைத்தாள். காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினர்.
அழகாய் ஓடிய நாட்களில் அவர்களின் காதலில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படத் தொடங்கியது. அவர்களின் காதல் உறவு நேஹாவின் வீட்டுக்கு தெரியவந்தது மிகப்பெரிய குடும்பம் அவளுடையது, எல்லாரும் கூடி அவளை சரமாரியாக வசைப்பாடத் தொடங்கினர்.
அவள் தந்தை அவளிடம், "உனக்கு அவனை பிடிச்சிருக்கா? அப்ப அவன் தன என் மருமகன் நீ ஒன்னும் யோசிக்காதம்மா எல்லாம் நல்லப் படியா நடக்கும்"என்றார். அவள் அம்மாவும் அவளை அன்புடன் அரவணைத்தார், "இவங்களப் பத்தி நீ ஒன்னும் யோசிக்காத அவன் உன்னை உண்மையாகவே விரும்பிறதா இருந்தா நாங்க உன் ஆசைக்கு குறுக்க வரவே மாட்டோம்" என்றார். ஆனால் அவளின் சொந்தங்கள் அவளை எச்சரித்ததை கண்டு ஹரிக்கு எதாவது ஆகிவிடுமோ என பயந்தாள், அவனுக்கு தொலைப்பேசி அழைப்பு எடுத்தாள்," என் கூட இனி பேசாதிங்க, இது தான் நான் உங்ககூடப் பேசும் கடைசி தடவை,இனி நான் உங்கக்கூடக் கதைக்க மாட்டேன், நீங்க உங்க படிப்பு முடிச்சப்பிறகு வீட்ல வந்துக் கதைங்க, இன்னும் ரெண்டு வருஷம் தானே" என கூறி விட்டு அழைப்பை துண்டித்தாள். அவன் அவளிடம் எவ்வளவோ கதைக்க முற்பட்டான், அவள் அந்த அழைப்புகளை கண்டுக்கொள்ளவே இல்லை. ஒரே ஒரு குறுந்தகவல் அவன் தொலைப்பேசிக்கு வந்தது அவளிடம் இருந்து,"என்னை வெறுத்திட முயற்சிசெய்யுங்கள் - நேஹா"...
இரண்டு வருடத்துக்குப் பிறகு...
நேஹா அவள் வீட்டில் மிகவும் ஆனந்தத்துடன் காத்திருந்தாள், இன்று தான் அவள் தந்த இரண்டு வருடத்தின் முடிவு, அவன் கதைப்பான் என காதலுடன் காத்திருந்தாள்... அவன் வரவே இல்லை, அழைப்புகளும் இல்லை, முகப்புத்தகம், குறுந்தகவல் எதற்கும் மறு பதில் இல்லை, அவளுக்கு ஹரியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை, அவளின் பெற்றோரின் சம்மதத்துடன் அவனைக்கான விரைந்து அவன் வீட்டுக்குச் சென்றாள். அவன் வீடுப் பூட்டிக்கிடந்தது. அவர்கள் எங்கே என அயலவர்களிடம் விசாரித்தாள். அவர்கள் கோயிலுக்கு போய்விட்டார்கள் என்றனர். ஒரு பதப்பதப்புடன் கோயிலுக்கு விரைந்தாள். அங்கு அமைதியாகப் பூசை நடந்துக்கொண்டிருந்தது, அருகே சென்றாள், அவனைக்கண்டு பின்புறமாகச் சென்று தொட்டாள் அவன் திரும்பினான், அது ஹரி அல்ல ஹரியின் தம்பி, இவள் கேள்வியுடன் "ஹரி?" என்றாள், திரும்பியவன் சற்றே விலகினான் அங்கு ஹரியின் படத்துக்கு மாலையிட்டு இருந்தனர், இது ஹரிக்கு 2ம் வருட நினைவஞ்சலி, அவள் அங்கேயே மயங்கி வீழ்ந்தாள்...
இரண்டு வருடத்துக்கு முன்பு அவள் "என்னை வெறுக்க முயற்சி செய்யுங்கள்" என்று ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் அல்லவா? ஹரி இதுவரை நேஹா கூறி எதையும் செய்யாமல் இருந்ததில்லை ஆனால் அவளை வெறுக்கும் அளவுக்கு அவன் மனம் கல் போன்றது அல்ல, உண்மைக்காதல், அதுவும் முதல் காதல், அவன் இதுவரை வேறேந்தப்பெண்ணையும் கடைக்கண்ணால் கூட பார்த்ததில்லை. அவளின் குறுந்தகவல் படிக்கும் நேரம் அவன் பாதையின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தான். அவளை வெறுக்கமுடியாது என முடிவெடுத்தவன் பாதையின் குறுக்கே நடந்து விட்டான், 3 வாகனங்களில் மோதியவன் உடல் பாதையில் வீழ்ந்தது, "நேஹா உன்னை வெறுக்க ஏலாதும்மா மன்னிச்சிரு..." எனக் கூறியப்படி உயிர் பிரிந்தது...
"காதல் காலமிருக்கும் வரை காத்திருக்கும்,
ஆனால் காலம் காதல் வரும்வரை காத்திருப்பதில்லை"
~அன்புடன் கோகுலன்.

Comments
Post a Comment