மறைந்திருக்கும் உன் முகம் பார்க்க,
மனமோ மயிரிழையில் ஊசலாடுது,
மானிடத்தின் மலைகுருவியாய்,
மங்கையவள் மாதவியாய் தோன்றியவள் அவளோ?
உன் கண்கள் தினம் காக்க,
இமைகள் ஆகிட என் இருதயம் துடிக்குதே,
என்னை விலகிட துடிக்கும் உன் கூந்தலுக்குள் பதுங்கிடும்,
பூவாய் மாறிட என் மனமும் தவிக்குதே...
வேடங்கள் இட்டு வேடிக்கை காட்டுகிறாய்,
என் உயிரோ வேதனைக்குள் வெந்திடுத்தே,
வேரோடு கொய்த மரமாக நானும்,
நீர் காண பயிர் நிலமாய் வாடினேன் தினமும்...
மயிலிறகால் வருடிச்செல்லும் மாருதமாய் நீயும்,
மணிக்கணக்காய் காத்துக்கிடந்தேன் மணிக்குயிலாய் நானும்,
கல்போன்ற மனமோ கரைந்துவிட்ட நிலையில்,
சிறகொடிந்த பறவையாய் தவித்திருக்கிறேன் தினமும்...
~அன்புடன் கோகுலன்.
வேடங்கள் இட்டு வேடிக்கை காட்டுகிறாய்,
ReplyDeleteஎன் உயிரோ வேதனைக்குள் வெந்திடுத்தே,
வேரோடு கொய்த மரமாக நானும்,
நீர் காண பயிர் நிலமாய் வாடினேன் தினமும்...///
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வொர்டர்ஃபுல்! சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பா!
கல்போன்ற மனமோ கரைந்துவிட்ட நிலையில்,
சிறகொடிந்த பறவையாய் தவித்திருக்கிறேன் தினமும்... ////
இந்தவரிகளும் அருமை!!
உங்கள் அன்பார்ந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் அன்பரே...
Delete