உன் கண்கள் கண்ட நினைவுகள்,
உன் சாலைகள் கடந்த பொழுதுகள்,
உன் வீட்டினில் கழித்த நிமிடங்கள்,
தினம் தேனாய் ஊறுது அன்பே.....
மனதுக்குள் காதல் பூத்த தருணங்கள்,
கனவுக்குள் உண்டான நெருக்கங்கள்,
விழிகளுக்குள் வரைந்த உன் விம்பங்கள்,
காலம் அது நிதம் இனிக்குது அன்பே.....
சில்லிடும் தென்றலில் நடந்த நொடிகள்,
வெண்பனியில் ஒளிந்திருந்த தடவைகள்,
கல்மேலே தாவித் திரிந்த காலங்கள்,
நினைக்கையில் சிரிக்கிறேன் அன்பே.....
பெண்ணாக பிறந்தது உன் தவறா?
நான் ஆணாக பிறந்தது என்ன சதியா?
நமக்குள் காதல் வந்ததென்ன விதியா?
உண்மை நீ சொல்லடி அன்பே.....
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment