Saturday, March 16, 2013

மழலை மொழி பேசுமா?

பொன்னிற மேனி, அழகின் ராணி,
 தொடுகையில் சிரித்திடும் சிரிப்பும் வகைகளில் தனி,
கள்ளமில்லை கண்ணீரில் கலப்படமில்லை,
 மொழியில்லை மழலைக்கு மொழியவதில்லை எல்லை...

புயங்கள் நான்கும் மண்ணில் புதையும் போது,
 காயங்கள் தினம் காணும் புவித்தாயும் சிலிர்க்கிறாள் இன்று,
மாயங்கள் இல்லை அவர்களிடம் மர்மங்கள் இல்லை,
 தாயங்கு கண்டு சிதறிடும் சிரிப்புக்கு ஏதடா விலை?

காதல் கொண்டு காமத்தால் நின்று,
 இரவினில் நடத்திய இன்ப ஆட்டத்தின் சான்று,
பெண்ணும் ஆணும் பேதையாய் மாறி,
 விதைத்து விட்ட விதையின் பத்தாம் மாத விளைவு...

அழகுக்கு அளவில்லை, மழலை அழகை அளந்திட வழியுமில்லை,
 விடலை பெண்ணிடம் கூட இவ்வழகு இவ்வளவுக்கில்லை...
மழலையை தொட்டுக் கொஞ்ச என் மயிரிழை கூட,
 தாண்டிட துடிக்குதடா புவியின் எல்லை...

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment