Wednesday, March 20, 2013

அன்புள்ள மகனுக்கு, (தாயின் பார்வையில்)

கண்ணே நீ என் உயிர் தானே?
 என் கண்ணுள் விம்பமாகி பதிந்த என் உணர்வு தானே?
பொன்னே மணியே பூந்தேனே பூவரசே,
 மலருள் ஒளிந்திருக்கும் அமுதே என் அரசே...

என் கை தொட்டு, பிடித்து கட்டியணைத்து,
 என் எச்சில் உன் கன்னம் நனைத்து,
என் உணர்வுகளால் உன்னை பிணைத்து,
 நான் சிரிக்க நீ மகிழ்வாயே என் நிலவே...

மண்ணை நீ தொட வலிக்குது என் மனந்தான்,
 வெயில் உன் தேகம் சுட எரியுது என் உடல்தான்,
கண்ணில் ஒருத் துளி நீர் கண்டு கலங்கிடும் என் இதயம் தான்,
 குயில் இல்லை அன்பே காக்கையாய் வாழ்கிறேன் நான்...

சேலையை நீ இழுத்திடும் கணங்கள் என்னை மறக்கிறேன்,
 மார்பினில் உன்னை நான் சுமந்து தினம் உறங்கினேன்,
மொழிகள் அறியா உன் வார்த்தையில் உள்ளம் உறுகினேன்,
 உனக்காய் தானே என் செல்லமே இன்று உயிர் வாழ்கிறேன்...

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment