Skip to main content

கத்தும் குழந்தையாய் மனமும்...

முத்துக்குள் முத்தங்கள் இடவும்,
 திக்கித் திணறிடுதோ இதயம்,
தத்தித்  தாவித் தடுமாறித் தினமும்,
 கத்தும் குழந்தையாய் கதறியே அழும்,
சிக்கிக் கொண்டு சிக்கல்கள் கூடும்,
 தத்-தம் தருணம் திணறினால் மரணம்...

பத்துக் கைவிரலும் பற்றிப் பிடிக்கும்,
 சத்து இன்றி சதைதான் குறையும்,
சொத்து சுகம் தேடாத மனமும்,
 கொத்துக் கொத்தாய் முள்ளையும் பறிக்கும்,
பித்துப் பிடித்து திரிய துவங்கும்,
 கத்துக் குட்டியை கவலைகளும் சூழும்...

நித்தம் கண்ட கனவுகள் மறையும்,
 சத்தம் இன்றியே சந்தங்கள் அடங்கும்,
புத்தம் புதிதாய் பூத்திடும் ரோஜாவும் - என்
 ரத்தம் கண்டு தலைதான் கவிழும்,
சித்தம் கொண்ட சித்தனாய் நானும் - இங்கு
 புத்தனாய் மாறினால் வலிகளும் குறையும்...

செத்துப் போகுதே மனமும் இன்று - ஏனடி என்னை
 வித்தாப் பெற்றேன் உன்னிடம் காதலும் அன்று...
முத்தா முடிவா மூழ்கியதால் அன்று - காதல் இனி
 பத்தா(த) உண்டியாய் மாறிடும் நிலைதான் இன்று...

~அன்புடன் கோகுலன்.

Comments

Popular posts from this blog

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...

En kaneer Sonna Kavithai!

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...) தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ஆண்டுகள் சென்றது, இரண்டு வருட நினைவுகளை அவர்கள் முழுமையாகவே தொலைத்து இருந்தனர். நிஷாவின் தந்தை அவளுக்கு விபத்து ஏற்பட்டவுடனேயே அவர்களின் நிறுவனத்தின் பெங்களூர் கிளையை மூடி விட்டார், ஏனெனில் அதனால் தானே இவ்வளவு சேதாரம் என அவர் மனதுக்குள் ஒரு நினைப்பு. நிஷா ஜெர்மெனியில் உள்ள அவர்களின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த துவங்கினாள். தருண் சென்னையிலேயே பெரிய ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்தான். இவ்வாறு இருக்கையில் அவர்கள் இருவருக்கும் தங்கள் இரண்டு வருட வாழ்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பல நாட்கள் கழித்தனர். தருணின் வேலைகளை கண்டு தருணின் நிறுவன அதிபர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அவனுக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் அவரே... ஒரு நாள் அவர்கள் நிறுவனத்தில் ஒரு விருந்துபச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகவும் பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அங்கு அந்த நிறுவனத்தின் அதிபர்...