மார்கழி மாத பனிக் கோட்டைக்குள்,
மங்கையவள் மனதுக்குள் சாரல்,
கோடை வெயிலில் - அவள்,
உடலுக்குள் பெய்திடும் தூறல்,
நித்திலங்கள் மேல் அவள் கூடல்,
கூட்டுதோ எமக்குள் இந்த ஊடல்...
செந்தேனே இரவின் வெண்ணிலவே,
பட்டுக் காட்டில் பெற்றெடுத்தக் கட்டழகே,
வந்தேனே வைகறைப் பெண்ணிலவே,
தொட்டு மண்ணில் விட்டுப் போன முத்தழகே,
நொந்தேனே உன்னாலே என்னிலவே,
கட்டு மரத்தில் கட்டி விட்ட கள்ளழகே...
சோலைகள் கண்டு கருகி - தவித்தேன்
சேலை பெண்ணே ஏன்?
மாலைகள் வண்டு மணிமகுடமோ,
மலை பெண்ணே சொல்?
பதில் கூறு பதற்றம் வேண்டாமடி,
பதபதைத்து என்னை பிதற்ற வைக்காதடி,
காதலே கண்ணின் திரைக்குள் - உன்
விம்பம் கல்லறையான வித்தை விளங்கிடவில்லையடி...
~அன்புடன் கோகுலன்.
அருமையான கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநன்றி அன்பரே எழுத்துப்பணி தொடரும்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete