மனமது கடலலைபோல் கரைமீது அலைமோதுதே,
கனவது உன் நினைவுகளால் தினமது நிறைந்ததுவே,
ஞாபகத்தில் கதவுகள் இன்று மறுபடி திறந்ததுவே,
சிந்தனைகளால் இதயமும் நிதம் சித்தரவதை பட்டிடுதே...
காதல் எனும் பட்டாம்பூச்சி மீண்டும் என்னுள் குடிப்புகுந்ததே,
நேரங்கள் மறந்து பாதைகள் தொலைத்து அலையசெய்ததே,
மரணத்தின் விளிம்பையும் எட்டிப் பார்த்திடும் ஆசை வந்ததே,
உன் நினைவுகளால் சிறை பட்டிருப்பதையே உயிர் தினம் விரும்புதே...
தேகம் தினம் மெலிவதை மனம் ஏற்க மறுக்குது,
கதவுகள் திறந்திருந்தும் கால்கள் வெளியேறுவதை தவிர்க்குது,
உன் ஓர் பார்வையால் பூத்த காதலடிப் பெண்ணே,
உனக்காய் வாழ்வதையே என் உயிர் விரும்பிடுது...
பிரிவின் வலி எனும் கொடுமையை முதல்முறை உணரவைத்தாய்,
தினமும் நொடி முழுதும் உன்னை மட்டும் நினைக்கவைத்தாய்,
வானவில்லின் நிறங்களுக்குள் என்னை வசிக்கவைத்தாய்,
உனக்காய் அலைமோதிய உயிரையும் இன்று அழகாய் கொய்து சென்றாய்...
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment