சிரிக்க நினைக்கிறேன் மனம் அழுது சிதையுதே,
வாழ துடிக்கிறேன் இதயம் துடிக்க மறுக்குதே,
கனவு முழுவதும் இந்த கணத்தில் நொறுங்குதே,
உயிரில் பாதி என்னை புரிய மறந்ததே...
வேதனையடி கண்ணே வெந்து சாகிறேன்,
பேதையடி பெண்ணே நொந்து அழுகிறேன்,
காதலடி நெஞ்சே நீ தீயில் எரித்தது,
உணர்வடி உயிரே நீ உடைத்து சென்றது...
தேவனில்லை நான் உன்னை மறந்து மகிழ்ந்திட,
விலங்கில்லை நான் புது உறவு தேடிட,
மானுடனடி உன்னை உயிராய் நேசித்தது,
சடலமானதடி இன்று உன்னை யாசித்தது...
கூறுவதை கூறிவிட்டேன் இனி உன் விருப்பம்,
கவிதையல்ல பெண்ணே இது கண்ணீரின் வாசகம்,
நிதமும் நீ விளையாடி மகிழ்ந்திட,
இது விளையாட்டில்லை அமுதே வாழ்கை....
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment