இதயத்துள் உன்னை சுமந்துகொண்டு,
தொலைத்தூரமும் நான் கடந்துவிட்டேன்,
இதழ்களோ மௌனித்துப் போனது அன்பே,
உன் குரலை கேட்டிடவே என் செவிகளும் ஏங்குது இங்கே!
வீசும் காற்றில் உன் சுவாசத்தை மட்டும் தனியாய் நுகர்ந்தேன்,
உன் தடத்தில் என் கால் பதித்தே தினமும் நடந்தேன்,
சிந்தும் மணியாய் சிதறும் உன் சிரிப்பை கொஞ்சம் ரசித்தேன்,
உன் பார்வையில் வீழ்ந்து மடிந்திடவே இன்று வாழ்கிறேன்...
உன் உடலுக்குள் உயிராய் வாழும் வரமொன்று கேட்கிறேன்,
தூரத்தில் விலகியிருந்தும் உன் நினைவுகளால் சிரிக்கிறேன்,
உன் குரல் இல்லா நாட்களில் சிதைந்தே மடிகிறேன்,
உனக்காய் வாழ்வதை எண்ணி மறுபடிப் பிறக்கிறேன்...
நீண்ட நாட்களும், நிம்மதியில்லா உறக்கங்களும்,
என் மனதை சிறைக்குள் அடைக்குதம்மா...
உன் நினைவுகளும், உன்னை காணும் கனவுகளும்,
என்னை சிறகடித்துப் பறந்திடவேச் செய்யுதம்மா!
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment