நிதமும் உன்னால் என் விழிகள் காணும் ஈரம்,
தினமும் விடியலை கண்டதும் மறைந்திட கூடும்,
எனினும் உன்னால் என் மனதில் உண்டான காயம்,
என் உயிர் பிரியும் போதிலும் அழியாதம்மா...
நினைவுகள் இனிமையானவை தான் கண்ணே,
ஏனடி என் மனம் மட்டும் அழுகிறது?
கனவுகள் சுகமானவை தான் அன்பே,
ஏனடி என் உயிர் மட்டும் உறைகிறது?
கண்கள் மூடினால் உன் முகம்,
இமைகளுக்குள் செருகிய தூசியாய் உறுத்துகிறதே...
சிந்தனைக்குள் உன் உருவம்,
என் உறக்கங்களையும் இன்று பறித்ததுவே...
மௌனங்களுக்கு என் வார்த்தைகள் அடங்குதடி,
நிலவுக்கும் என் மனம் இன்று மயங்குதடி,
ஆனால் நீ இன்றி என் மனம் மட்டும்,
காதலுக்குள் சிக்கித் தனியாக தவிக்குதம்மா..
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment