அன்பே உந்தன் குரல் ஏனோ,
என் செவி அடைந்திட மறுத்திடுதே...
தனிமையில் இன்று தவிக்கும் நிலை,
தினமும் முடிவின்றி நீடித்திடுதே...
உன்னை கண்டு நான் கண்விழித்தேன்,
நினைவில்லை கனவென்று உணர்ந்தேனடி...
உண்மைகள் என் உணர்வுகளை வாட்டிட,
இன்று விழிகள் திறந்திடும் போதே வலித்திடுதே...
என் இதயம் கண்ணீரில் நனைந்திடுதே,
குருதி இன்றி அது இன்று துடித்திடுதே...
உள்ளமோ உன்னை தினம் தேடிடுதே,
உயிரோ நீ இன்றி உருகிடுதே...
காதல் என்னும் பிறவித் துன்பம்,
நீ இன்றி நானும் உணர்ந்தேன்...
மரணம் காண மதி விரும்பும் நிலையில்,
நீ இல்லா ஒரு உலகம் இனி வேண்டாம் அன்பே!
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment