தேடியது காதலா? நெஞ்சங்களின் மோதலா?
பேசியது புரியவில்லை மனமே...
மாதரின் விழி கண்டு மடமைக்குள் மூழ்கினேன்,
ஏங்குகிறேன் உன்னை நினைத்து தினமே...
சதிகளின் சங்கமமிது சடலமாய் உடல் மாறுது,
மரணத்தின் வாசலில் இன்று மண்டியிட்டு கிடக்கின்றேன்...
நிமிடங்கள் முழுவதும் உன் நினைவுகளால் நிரம்புது,
மனதை கட்டுபடுத்த மதி வழியின்றி தடுமாறுது...
துன்பங்களும் வாழ்கையில் ஒரு பகுதி தான்,
என் வாழ்க்கையோ துன்பத்துள் ஒரு பகுதி தான்,
இன்பத்தால் சிரிக்கும் நேரம் கூட,
துன்பம் என்னை வந்து அணைக்கிறது...
காத்து கிடக்கும் சுகங்கள் இனி இல்லை,
ஏங்கி தவிக்கும் நாட்கள் இனி இல்லை,
ஒரு வார்த்தையில் நீ முடித்தாய்...
இன்று என் வாழ்கையே முடிந்து விட்டதே...
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment