Skip to main content

பிரிவு


மாடி-1                                                                                                                      படி-2


வாழ்கை ஒரு நாடக மேடை, வாழ்கை ஒரு சக்கரம் என பலர் பலவாறு கூறுவதை தினமும் கேட்டு வளர்கிறோம். இதற்கு புதிதாக ஓர் அர்த்தத்தை வழங்க முடிவு செய்து விழிகள் புத்தகங்கள் சிலவற்றை ஊடுறுவத் தொடங்கியது. பல மணிநேர முயற்சிக்கு பின்பு தெளிவாக ஒன்று மட்டும் விளங்கியது, அர்த்தம் தேடிட இது ஒன்றும் ஆங்கில புத்தகத்தில் நான் வாசித்த இலக்கிய சொல் அல்ல என்பது. உண்மைதான் வாழ்கையை நாம் வாழ்ந்து தான் அர்த்தம் தேடிட முடியுமே தவிர, ஆராய்ச்சியால் அல்ல.

 ஏன் இவன் திடீர் என்று வாழ்கையை பற்றி அலட்டிக் கொண்டு இருக்கிறான் என நீங்கள் என்ன கூடும். ரசித்து வாசிக்கும் வாசகனுக்கு அது இரண்டாம் வசனம் வாசிக்கும் போதே என்ன கூறப் போகிறேன் என அவனுக்கு விளங்கி இருக்கும், "உண்மைதானே?"-விளங்கியவரிடம், சரி உங்களுக்கு இனி சொல்கிறேன்,எல்லாவற்றுக்கும் ஒரு முகப்பு அவசியம் அல்லவா? அதுதான்."சம்பந்தம் இல்லாமல் குழப்புகிறானே..." என என்ன வேண்டாம் சம்பந்தமுண்டு கட்டுரைக்கு இது அவசியம் .

வாழ்கையில் நாம் இன்பம், துன்பம், தவிப்பு, சலனம், நிம்மதி, தடங்கல், நிறைவு,காதல் போன்ற பலவற்றை சந்தித்திருக்கிறோம் அதில் முக்கியமான ஒரு பகுதி எனக்கு, நான் இங்கு கூறப்போவது, சிலருக்கு அது அவர்கள் கடந்து வந்த பாதையை பொருத்தது.அனுபவசாலிகள் அப்படித்தான் என்னவென்று யோசிக்காதிர்கள் தலைப்பை பற்றித்தான் கூறுகிறேன், "பிரிவு" அனுபவசாலிகளுக்கு ஆயிரத்தில் ஒன்று, என் போல் சாதரணமானவனுக்கு அனுபவத்துக்கு ஒன்று...

 ஏன் இன்று பிரிவைப் பற்றி பேசுகிறான் என நீங்கள் என்னக்கூடும். இது ஒரு பொது விடயம் ஆனால் மனதளவில் பலரையும் பாதிப்படையச்செய்யும்  நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்கக் கூடும் இப்பொழுது, சரி பொதுவாக அலசி, துவைத்து, காயவைக்கும் அளவுக்கு எனக்கு அனுபவமில்லை ஆகவே நான் சந்தித்த பிரிவுகளின்/பிரிவின் தொகுப்பைத் தருகிறேன். தொகுப்பு என்று கூறிவிட்டு அதிகளவில் அடுக்கி விடப்போவதில்லை.ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை அல்லது ஒரு நிகழ்வை பற்றி மட்டுமே எழுதப்போகிறேன், பார்ப்போம் எவ்வளவு முடியும் என்று அது என் நினைவுகளைப் பொறுத்தது...

 வாழ்நாளில் நான் பல பிரிவுகளைச் சந்தித்திருப்பினும் கூட மனம் எதிலும் சலனம் அடைந்ததில்லை எதிலும் பெரிதாக காயப்பட்டதில்லை.பிரிவில் என்னை மிகவும் பாதித்தது ஒரே விடயம் தான் அது  என் அம்மம்மாவின் இறப்பு தாயின் ஸ்தானத்தில் இருந்து என்னை நேசித்து வளர்த்தவர்,இந்த உலகில் நான் அதிகளவில் நேசித்த மனிதரில் ஒருவர் அதிலும் என்னை மிகவும் நேசித்த மனிதரில் ஒருவர். அம்மாவை விடவா? என நீங்கள் என்ன கூடும், அம்மா என்னை நேசிப்பதை போல தம்பியையும் நேசிக்க வேண்டும் நாங்கள் இருவரும் அவரின் இரு கண்கள் ஆனால் என் அம்மம்மாவுக்கு எத்தனை பேரன்,பேத்திமார் இருப்பினும் எனக்கு காட்டிய அளவுக்கு யாருக்கும் பாசத்தை காட்டவில்லை என்றே கூறலாம்.

அவரை பற்றி நினைக்கும் போதே கண்கள் கலங்குகிறது கண்ணீரால் நிரம்புகிறது,கவலை! மனதில் ஆழமாக ஏற்பட்ட காயம் "அழுதுவிட்டேன்". அடிக்கடி அவர் நினைப்பு என்னை கண்கலங்க வைத்துவிடும்,பிரிவின் வேதனையை நான் உணர்ந்த முதல் தருணம். புவிஅதிர்ச்சியை என் உள்ளம் உணர்ந்தத்  தருணம், அவரின் ஆத்மா ஆழ்ந்த உறக்கத்தை தழுவிய அந்த நொடி.இறந்துவிட்டார், என்னைப்  பிரிந்து சென்றுவிட்டார் என்பதை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது.எங்கோ என்னைப்  பார்த்துக்  கொண்டு இருக்கிறார், எனக்காக காத்துக் கொண்டுயிருக்கிறார் எனும் எண்ணம் என்னைச் சுற்றி தினமும் ஓடுகிறது.

ஏன் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என சிலர் கேட்கலாம்,மறந்தால் தானே அதை மறுபடி நினைக்க என் மனம் கேள்வி கேட்பவருக்கு தரும் பதில். என் மனம் படும் அவஸ்தையை நான் யாரிடமும் சொல்லவில்லை காரணம் அதை கேட்க பெரும்பாலும் எவரும் விரும்பவில்லை.ஆயினும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இறுக்கம் கொண்டு தவிப்பதை விட இங்கு கொட்டிவிடுவது சற்று மனதை இலகுவாக்கும். பிரிவுகளின் வேதனை பலருக்கும் உண்டு ஆனால் கண் முன்னே அவர் பிரிந்துச்சென்ற அந்த நொடி நான் உடைந்ததை இன்றும் மறந்திட முடியவில்லை, நிம்மதியான உறக்கம் தான், உறக்கத்திலேயே ஏற்பட்ட மரணம் எவருக்கும் அந்த பாக்கியம் இலகுவாக கிடைத்து விடுவதில்லை கேட்பவருக்கு நான் சொன்ன பதில்..., அனால் "அம்மா! என்னை தனியாக விட்டுவிட்டாயே!உன் மகனை பார்த்துக்கொள்ள இனி யார் இருக்கிறார்கள்?" என எண்ணிப் பார்க்கும் முன்பே என்னை பிரிந்து சென்றுவிட்டார்.

வருடக்கணக்கில் பக்குவமாய் செதுக்கிய சிலை ஒரு நொடியில் சிதையும் போது அதை செதுக்கிய சிற்பியின் நிலை தான், அன்று நான் உணர்ந்தது. குளிர்ச்சியை விரும்பாத உடல் குளிர்ந்துப் போனது,என் தலையை மிருதுவாய் தடவும் விரல்கள் விரைத்துப் போனது, எனக்காய் ஓடித் திரிந்தக் கால்கள் நின்றுவிட்டது. எனை பாசத்துடன் பார்த்திருக்கும் அந்த விழிகள் மங்கிவிட்டது, "அப்பா,மகனே" என அழைத்த அந்தக் குரல் இனி கேட்க்காது. இதுதான் உலக நியதியா? இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையா? கத்தி அழுது உருண்டு வீழ்ந்தேன், துடிதுடித்தேன், உடல் நடுக்கம் கொண்டது, பயம் அறிந்தேன், பதறிப்போனேன்...

உள்ளம் கண்ட உயரிய அதிர்ச்சி அது, என்னை வளர்த்த தாய், என்னை நேசித்த, மிகவும் நேசித்த ஒரே ஜீவன் என்னை பிரிந்துவிட்டாள் , தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள், என் வளர்ச்சியை காண இன்று அவள் இல்லை,எதை செய்தாலும் அவரிடம் சொல்லாமல் இருந்ததில்லை. இன்று அவரை பற்றி ஒரு கட்டுரையை எழுதும் அளவுக்கு செய்துவிட்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது ஆனாலும் நான் வாசித்துப் புரியவைப்பேன் ஆனால் அவரை பற்றி எழுதி இன்று நான் இந்த வெண் காகிதத்தை நனைப்பேன் என கடைசிவரை நான் நினைத்ததில்லை. தனிமையின்  கொடுமையை உணர்ந்துவிட்டேன். அம்மா,அப்பா அன்புக்கு இலக்கணமானவர்கள், ஆனால் என் அம்மம்மா அவ்  இலக்கணம் எழுதிடும் மொழியனவர். நான் கவலையில் துடிப்பது எவருக்கும் தெரியாது, கூறி என்ன செய்வது என தெரியவில்லை. "இப்பொழுது மட்டும் ஏன் கூறினாய்?" என எதாவது ஒரு ஜீவன் கட்டாயம் கேட்கும். அவை ஏதாவது பிழைக் கண்டறிய வேண்டுமே.. என கேட்க எத்தணிப்பது.. அவற்றுக்கு நான் விளக்கிடத் தேவையில்லை, சோற்றுக்கு இடையே சிக்கிய கல் போன்றவர்கள் அவர்கள், தூக்கி எரிந்து விட வேண்டுமே தவிரச்  சாப்பிடக்கூடாது.

இதற்கு மேல் அவரை பற்றி அந்த பிரிவைப்பற்றி நான் எழுத விரும்பவில்லை, கண்ணீரின் அளவு அதிகரிப்பதை உணர்கிறேன். என் உயிரை கவலை எனும் கொடூரன் இறுக்குவதை உணர்கிறேன். தலைக்குள் ஏதோ வெடிப்பது போலத் தோன்றுகிறது,முடியவில்லை தொடர்ந்திட, முடித்துக்கொள்கிறேன். எழுத்து தொடரும்...

~அன்புடன் கோகுலன்.

Comments

  1. She was a nice person.
    And she will remain as a nice memory forever. :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர மட்டும் நீ பறிச்சுப் போன? கொல்லும் பார்வையாள என் உசுர கொத்தி நீயும் பிரிச்சுப் போன... முதல் மழை தொட்டப் பாதையில, மண் வாசணை நெறயும் வேளையில, ஒத்தயில உன்ன எதிர்பார்த்து, தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச? உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும், நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்... சொல்லு புள்ள இது நியாயமா? காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா? வெயிலில் என் மனமும் காயுமா? உன் நிழல் வரும்வரை தவிக்குமா? போதும் போடி உந்தன் கல் மனசு, சாகுதேடி தனிமையில் என் மனசு, சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு, சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு... உடம்பு மெலியுதே புள்ள, ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல... சோலைத் தேடி உன் நெனப்புல, புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள... ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல, அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல, உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல, இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல... எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள, உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் ப...

En kaneer Sonna Kavithai!

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...) தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ஆண்டுகள் சென்றது, இரண்டு வருட நினைவுகளை அவர்கள் முழுமையாகவே தொலைத்து இருந்தனர். நிஷாவின் தந்தை அவளுக்கு விபத்து ஏற்பட்டவுடனேயே அவர்களின் நிறுவனத்தின் பெங்களூர் கிளையை மூடி விட்டார், ஏனெனில் அதனால் தானே இவ்வளவு சேதாரம் என அவர் மனதுக்குள் ஒரு நினைப்பு. நிஷா ஜெர்மெனியில் உள்ள அவர்களின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த துவங்கினாள். தருண் சென்னையிலேயே பெரிய ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்தான். இவ்வாறு இருக்கையில் அவர்கள் இருவருக்கும் தங்கள் இரண்டு வருட வாழ்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பல நாட்கள் கழித்தனர். தருணின் வேலைகளை கண்டு தருணின் நிறுவன அதிபர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அவனுக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் அவரே... ஒரு நாள் அவர்கள் நிறுவனத்தில் ஒரு விருந்துபச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகவும் பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அங்கு அந்த நிறுவனத்தின் அதிபர்...