உன்னை நினைத்து உள்ளதை உருக வைத்தாய்,
இருள் விலகினும் ஒளியின்றி திணர வைத்தாய்,
காரணமின்றி கானகத்தில் காக்க வைத்தாய்,
விடையில்லா வினாக்களை விழிக்குள் வைத்தாய்...
வலக்கையை பிடித்து வழுக்கி வலைக்குள்ளே விழுந்தேன்,
வலி கொண்டு துடித்து வழியின்றி தவித்தேன்...
கவலையின் கரையில் கரைந்து கறையானேன்,
விளக்கமின்றி விரைந்தோடி இன்று விறைத்தொடுங்கினேன்...
உன் நியாயங்கள் என் காயங்கள் ஆற்றுமா?
கண்ணீரில் தோய்ந்து தேய்ந்து அழியுமா?
என் காதலின் நிலைகண்டு கல்லறையும் அழைக்குமா?
என் வேதனையின் திடம் கண்டு விண்ணும் கலங்கிடுமா?
காதலில் தோற்பவன் காதலை வெறுக்கிறான்,
காதலில் வெல்பவன் காதலியிடம் தோற்கிறான்...
என் மங்கையின் மௌனத்தால் மனமும் மரணிக்குதே...
போதையில் வீழ்ந்தழியும் பேதையாய் ஆக்குதே...
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment