பார்ப்பவரை சிலையாக்கிடும் உந்தன் கண்கள்,
தென்றலையும் வருடிடும் உந்தன் கூந்தல்,
ஒரு கணம் ருசி பார்க்க தூண்டும் உந்தன் இதழ்களையும்,
மறக்காது எந்தன் நெஞ்சம்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...
புல்லின் நுனியில் தவழ்ந்திடும் உந்தன் கால்கள்,
பஞ்சில் நெய்தது போன்ற உந்தன் கைகள்,
பளிங்கில் வார்த்தது போன்ற உந்தன் மேனியையும்,
விட்டு விலகாதடி எந்தன் நிழழும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...
பேசாமல் எரித்திடும் உந்தன் கோபம்,
உன் வார்த்தைக்காக ஏங்கிடச்செய்யும் உந்தன் மௌனம்,
பயத்துள் மூழ்கிக்கிடக்கும் உந்தன் மதியையும்,
வெறுக்கிறேன் நான் தினமும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...
என் கனவுகளை நிரப்பிடும் உந்தன் நினைவுகளையும்,
என் கண்களை கலங்கிடச்செய்யும் உந்தன் வார்த்தைகளையும்,
என்னை நான் வெறுத்திடச் செய்த நம் காதலாலும்,
தவிக்கிறேன் ஒவ்வொரு நொடியும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...
~அன்புடன் கோகுலன்.
நன்றி சகோ
ReplyDelete