Sunday, November 11, 2012

என்னை கொய்தவள்!


மின்னல் பாய்ந்து தென்றல் தோய்த்து மங்கை ஆனவள்,
 கண்கள் கோர்த்து நெஞ்சம் பார்த்து காதல் சேர்த்தவள்,
மனதுள் பூத்து மோகம் வார்த்து கவிதை தந்தவள்,
 விழிக்குள் விழுந்து உணர்வுகள் கொய்து என்னை வாட்டியவள்...

மெல்ல சிரித்து கொள்ளை கொண்டாள்,
 முகத்தை முத்தங்களால் ஈரம் செய்தாள்,
கைகளுக்குள் உடலை சேர்த்துக் கொண்டாள்,
 சிரிப்பால் எனையும் கைது செய்தாள்...

மூளையை திருகி மனதை பிழிந்தாள்...
 வானவில்லை குடையாய் வானத்தையும் கூரையாக்கினாள்,
நினைவுகளில் சிக்கி கனவுகளில் தவிக்கவிட்டாள்,
 அவள் குரல் கேட்டு மனதையும் இளகச் செய்தாள்...

புன்னகை பூவாய் என் உள்ளமெங்கும் பூத்தவள்,
 ஓவியங்களாய் அவள் கண்கள் வரைந்திடச் செய்தவள்,
கடமைகளை மறந்து கவிதைகளை மந்திரமாக்கியவள்,
 உணர்வுகள் இழந்து அவள் உறவுக்காக தவித்திடச் செய்தவள்...

~அன்புடன்  கோகுலன்.

2 comments:

  1. அருமையான கவிதை சகோ. காதலின் பாதிப்பு கவிதைகளில் தென்படுகின்றது. :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே...
      எழுத்து தொடரும்...

      Delete