காதலே என் காதிலே உன் காதலை நீ சொல்லிவிடு...
பூவாசமே என் சுவாசமே உயிர் காதலை நீ கிள்ளிவிடு..
தென்றலே என் நெஞ்சிலே உன் நினைவுகளை நீ உருக்கிவிடு..
மாலையில் ஒரு மாலையாய் உன் மார்புக்குள் எனை ஒளித்துவிடு..
காதலின் மடமைக்குள் மூழ்கி மடிந்தேன்,
கடவுளின் பெயரையும் உணர மறுத்தேன்,
காவியமாய் புது கவிதை வடித்தேன்,
கானகத்துள் கண் இழந்து தவித்தேன்...
மரங்கொத்தியே மனதை கொத்தி விட்டாய்,
துளை இட்டதும் தூரத்தில் மறைந்து விட்டாய்,
காலம் ஓடுது கவலையும் கூடுது,
கலங்கரையாய் இருந்தவள் களைந்து விட்டாள் ...
என் மாதங்கள் உன் நாதத்தால் நிறைகிறது,
விடை தேடிட விடுகதைகள் மறுத்திடுது,
காற்றிலே உன் வாசமும் இன்று,
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று அழிக்கிறது...
~அன்புடன் கோகுலன்.
Comments
Post a Comment