இரவு முழுதும் நான் விழித்திட வெண்ணிலவும் உதித்திடுமோ?
கண் இமைகளை வருடும் காற்றும் கதைகள் பல கூறிடுமோ?
உணர்வை வாட்டிடும் காதலும் உயிரை உறையச் செய்திடுமோ?
என் மௌனத்தை சிதறச் செய்த உன் குரல் இன்று மந்திரமாகிடுமோ?
உன் விரல் தொட்டு இடை பிடித்து முத்தமிட ஆசைதான்,
கண் திறந்திருந்து கனவுகளை பருகிட ஆசைதான்,
என் மனம் விற்று உன் காதலை வாங்கிட ஆசைதான்,
மண் உலகம் விட்டு விண்ணுலகம் பறந்திட ஆசைதான்...
மகரந்தம் கூடிய மலர்களாய் மாறி,
உன் கூந்தலுக்குள் மணந்திட வேண்டும்...
மலர்கள் கூடிய மலர்மாலைகள் சூடி,
உன் கரம்பற்றி மணந்திடும் நாளும் வேண்டும்...
காலம் மாறிடும் கவலைகள் விரைந்தோடும்,
விழிகளின் ஈரமும் விடைகண்டு அகன்றிடும,
என் தேகமும் உன் மடியில் சரணடையும்,
நம் உயிரும் ஓர் உணர்வால் இணைந்திடும்...
~அன்புடன் உன் கோகுலன்.
Comments
Post a Comment