என் தோழியே.. என் தோழில் சாய்ந்துவிடு, கண் மூடியே... கனவுகள் காண்போம் வந்துவிடு, விண் நாடியே... விரைவோமா? சம்மதித்திடு, பெண் ராணியே... என் விரல்களுக்குள் உன் விரல்கள் சேர்த்துவிடு... வயதிருக்கு நமக்கு வாழ்ந்திடவே வழிகள் திறந்தே இருக்கு, கொய்து நீ சென்ற என் இதயம் வாழ்த்திட உன் உயிரும் இருக்கு, பெய்து நின்ற இம்மழையில் நனைந்து, காய்ந்தே என் உடலுமிருக்கு, ஆய்ந்து விட்ட என் உயிர் திரும்பிடாத உன் கடனுமிருக்கு... கண் முழுதும் உன் நினைவுகள் ரேகையாய் மாறுதே, என் தேகம் உன் உதட்டின் ஈரம் பட்டுக் குளிர்ந்துப் போனதே, மண் முழுதும் படரும் உன் நிழலில் குடிப்புகுந்திட என் உயிர் ஏங்குதே, மின் பாய்ந்த மரமாய் உன் பார்வையால் என் உதிரமெல்லாம் கருகியதே... தன்னந்தனியாய் பேசி தவிக்கும் இந்நாட்கள், வெட்டவெளியில் பட்ட மரமாய் பட்டுப் போன வார்த்தைகள், தொட்டுப் போவாயா என சுடுபட்டுப் போய் காத்திருக்கும் காலங்கள், என்று தான் என்னை விட்டு மறையுமோ? நீ இன்றியே இந்த உலகும் மாயமோ? உன் நினைவே இறுதியில் என்னை மாய்க்குமோ? ~அன்புடன் கோகுலன்.