Skip to main content

Posts

Showing posts from 2012

காத்திருந்த காலம்...

   மாடி 1                                                                                                                                 படி 4 மார்கழி மாத குளிர் மனதோடு ஏற்படும் சில உணர்வுகள், கண்கள் மூடி இமைகள் திறக்கும் முன் சடுதியாக ஓடிவும் நிகழ்வுகள், பெயர் கூறி கூப்பிட பயபட்டவாறு பதுங்கிக்கிடக்கும் தருணங்கள், இவை ஒரு சில இளமையின் அழகிய ...

வலி...

போற்ற தேவையில்ல கண்ணே, தூற்றாதிரு நித்தோம் முன்னே, விளையும் நிலமடி பெண்ணே, முத்து குளிக்கயில மூழ்கி செத்தனே.... பொங்கி வச்ச சோறு நான் தொடவே கசக்குது, நெஞ்சு குழிக்குள்ள ஒரு ஜீவன் தவிக்குது, ஊரு சனம் எல்லாம் நம்ம பொலப்ப பாத்து சிரிக்குது, எழும்பிட நினச்சவன ஆறடிகுள்ள அடக்குது..... சின்னஞ்சிருசு கூட என்ன கண்டா ஒதுங்குது, கட்டையில போக கூட வழியின்றி ததும்புது, மொத்ததுல நானோ என்ன சொல்லி பொலம்புறது, பேசயில கூட சத்தம் வர மறுக்குது.... கொலகுத்தோம் செஞ்சவன் கூட சந்தோசமா திரியுறான், ஒருக்க தோத்துப்புட்டு தெனமும் சாகுரனே நெதமும்.... செதறுன என்ன சேத்து வைக்க தேவல, செரகொடிஞ்ச பறவய பறக்க விட இங்க யாருமில்ல... ~அன்புடன் கோகுலன்.

அன்பே!

உன் கண்கள் கண்ட நினைவுகள்,  உன் சாலைகள்  கடந்த பொழுதுகள், உன் வீட்டினில் கழித்த நிமிடங்கள்,  தினம் தேனாய் ஊறுது அன்பே..... மனதுக்குள் காதல் பூத்த தருணங்கள்,  கனவுக்குள் உண்டான நெருக்கங்கள், விழிகளுக்குள் வரைந்த உன் விம்பங்கள்,  காலம் அது நிதம் இனிக்குது அன்பே..... சில்லிடும் தென்றலில் நடந்த நொடிகள்,  வெண்பனியில் ஒளிந்திருந்த தடவைகள், கல்மேலே தாவித் திரிந்த காலங்கள்,  நினைக்கையில் சிரிக்கிறேன் அன்பே..... பெண்ணாக பிறந்தது உன் தவறா?  நான் ஆணாக பிறந்தது என்ன சதியா? நமக்குள் காதல் வந்ததென்ன விதியா?  உண்மை நீ சொல்லடி அன்பே..... ~அன்புடன் கோகுலன்.

யாரோ அவள்?

மறைந்திருக்கும் உன் முகம் பார்க்க,  மனமோ மயிரிழையில் ஊசலாடுது, மானிடத்தின் மலைகுருவியாய்,  மங்கையவள் மாதவியாய் தோன்றியவள் அவளோ? உன் கண்கள் தினம் காக்க,  இமைகள் ஆகிட என் இருதயம் துடிக்குதே, என்னை விலகிட துடிக்கும் உன் கூந்தலுக்குள் பதுங்கிடும்,  பூவாய் மாறிட என் மனமும் தவிக்குதே... வேடங்கள் இட்டு வேடிக்கை காட்டுகிறாய்,  என் உயிரோ வேதனைக்குள் வெந்திடுத்தே, வேரோடு கொய்த மரமாக நானும்,  நீர் காண பயிர் நிலமாய் வாடினேன் தினமும்... மயிலிறகால் வருடிச்செல்லும் மாருதமாய் நீயும்,  மணிக்கணக்காய் காத்துக்கிடந்தேன் மணிக்குயிலாய் நானும், கல்போன்ற மனமோ கரைந்துவிட்ட நிலையில்,  சிறகொடிந்த பறவையாய் தவித்திருக்கிறேன் தினமும்... ~அன்புடன் கோகுலன்.

விதியா? விடுகதையா?

தீயிலே வாழ்கிறேன் மௌனத்தில் சாகிறேன், பேதையாய் திரிகிறேன் போதையை வெறுக்கிறேன், தேடல்கள் முடிகிறதே சிரசும் வலிக்கிறதே, ஆயிரம் கோடி பிழைகளும் என் கழுத்தை நெரிக்கிறதே... கடவுளை மறுத்தாலும் மறக்கவில்லை எக்கணமும், ராஜ்யங்கள் தேடியே அடங்கிவிட்டேன் இடுகாட்டிலே, மனமிங்கு தடை பல உடைத்தாலும், விடை இன்றி வாழ்கையும் வெறுக்கிறதே... கவலைகள் கானகத்துக்கு வழி காட்டும், மதி தனை விதியதும் மூடிவிடும், வேரின்றி மரம் மட்டும் என்ன செய்யும், கருகிட தனிமையில் துடித்து நிற்கும், ஏழையாய் பிறந்தாலும் மன்னனாக துடிக்கிறோம், தொடர்கதை இங்கு முடிவேது பிறகு ஏன் வருந்துகின்றோம், கோடி விளக்குகளும் இரவுகளை மாற்றுவதில்லை, மன மாரும் நேரம் எம்முயிருக்கு இப்பூமியில் இடமுமில்லை.... ~அன்புடன் கோகுலன்.

என் தோழன்...

நிழலாய் மாறியே தினமும் குடைப்பிடித்தாய் தோழா, நான் கண்கலங்கும் வேலை நீ அழுதாயே தோழா, என் தவறுகளுக்கு நீ தண்டித்துக் கொண்டாயே தோழா, நினைவுகள் என் கனவுகளில் உன் சிரிப்பை காட்டுதே தோழா.. உன் தோழில் சாய்ந்தேன் கவலைகள் மறந்திட, உன் சோற்றைப் பகிர்ந்தேன் என் பசியைப் போக்கிட, உன் வீட்டில் உறங்கினேன் உண்மைகள் பகிர்ந்திட, உன் விளக்கிலே படித்தேன் என் வாழ்க்கை விளங்கிட... நட்புக்கு இலக்கணமில்லை விளக்கிட வழிகளில்லை, விளக்கிட நான் துடித்த வேலைகளில் வலிக்குதே என் மூளை, இருளை நான் கண்டது இல்லை தோழா, என்னுடன்  என் பாதைகளில் நீ  தொடர்ந்திடும் போது... எண்ணங்கள் மேலோங்கிட செய்தவன் நீயே, அலை மோதிய என் கனவுகளை நனவாக்கியவன் நீயே, கோடிப் பேர் கொண்ட உலகத்தில் எனை நாடியவன் நீயே, உலகமே இருண்டிடும் போதும் என்னுடன் உலகை வெல்ல துடிப்பவன் நீயே... என் தோழன்... ~அன்புடன் கோகுலன்.

வேகம் குறையபோவதில்லை...

தனிமையில் வாழ்ந்திடு தரங்கெட்டு வாழ்ந்திடாதே, விதையாய் மாறிடு விருட்சமாய் வளர்ந்திடு, அமைதியாய் வாழ்ந்திடு அடங்கிட மறுத்திடு, வேகத்தை கூட்டிடு வேலையை கூட்டிடு... இளமையை புசித்திடு ரத்தத்தையும் ரசித்திடு, சித்தனாய் உயர்ந்திடு நித்திரையிலும் விழித்திடு, புத்தனாய் பொறுத்திடு யுத்தங்களையும் விரும்பிடு, வித்தகனாய் இருந்திடு விஞ்ஞானத்தையும் விளக்கிடு... தடைகளை உடைத்திடு தரிப்பதை தவிர்த்திடு, அரசனாய் வாழ துடித்திடு அடிமைத்தனம் வெறுத்திடு, தீமையை தீயிலிடு தீது செய்வாரை தீண்டாதிரு, நரகத்தில் வாழ்ந்திடு நன்மைகளை புகட்டிவிடு... வீழ்ந்திடும் ஒவ்வொரு முறையும் விழுதாய் மாறிடு, மேதையாய் மாறிடு மேகத்தையும் வீடாய் மாற்றிடு, சாலையில் வாழ்ந்தாலும் சரித்திரம் படைத்திடு, மடமைகளை மறந்திடு மனிதனாய் வாழ்ந்திடு! ~ அன்புடன் கோகுலன்.

சுவடுகள் ஒரு பார்வை!

ஒரு கதை...

படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே ... ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அ...

வரம் வேண்டும்

 இரவு முழுதும் நான் விழித்திட வெண்ணிலவும் உதித்திடுமோ?  கண் இமைகளை வருடும் காற்றும் கதைகள் பல கூறிடுமோ? உணர்வை வாட்டிடும் காதலும் உயிரை உறையச் செய்திடுமோ?  என் மௌனத்தை சிதறச் செய்த உன் குரல் இன்று மந்திரமாகிடுமோ? உன் விரல் தொட்டு இடை பிடித்து முத்தமிட ஆசைதான்,  கண் திறந்திருந்து கனவுகளை பருகிட ஆசைதான், என் மனம் விற்று உன் காதலை வாங்கிட ஆசைதான்,  மண் உலகம் விட்டு விண்ணுலகம் பறந்திட ஆசைதான்... மகரந்தம் கூடிய மலர்களாய் மாறி,  உன் கூந்தலுக்குள் மணந்திட வேண்டும்... மலர்கள் கூடிய மலர்மாலைகள் சூடி,  உன் கரம்பற்றி மணந்திடும் நாளும் வேண்டும்... காலம் மாறிடும் கவலைகள் விரைந்தோடும்,  விழிகளின் ஈரமும் விடைகண்டு அகன்றிடும, என் தேகமும் உன் மடியில் சரணடையும்,  நம் உயிரும் ஓர் உணர்வால் இணைந்திடும்... ~அன்புடன் உன் கோகுலன்.

கலங்கரையே.. களைந்ததுவே...

காதலே என் காதிலே உன் காதலை நீ சொல்லிவிடு...  பூவாசமே என் சுவாசமே உயிர் காதலை நீ கிள்ளிவிடு.. தென்றலே என் நெஞ்சிலே உன் நினைவுகளை நீ உருக்கிவிடு..  மாலையில் ஒரு மாலையாய் உன் மார்புக்குள் எனை ஒளித்துவிடு.. காதலின் மடமைக்குள் மூழ்கி மடிந்தேன்,  கடவுளின் பெயரையும் உணர மறுத்தேன், காவியமாய் புது கவிதை வடித்தேன்,  கானகத்துள் கண் இழந்து தவித்தேன்... மரங்கொத்தியே மனதை கொத்தி விட்டாய்,  துளை இட்டதும் தூரத்தில் மறைந்து விட்டாய், காலம் ஓடுது கவலையும் கூடுது,  கலங்கரையாய் இருந்தவள் களைந்து விட்டாள் ... என் மாதங்கள் உன் நாதத்தால் நிறைகிறது,  விடை தேடிட விடுகதைகள் மறுத்திடுது, காற்றிலே உன் வாசமும் இன்று,  என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று அழிக்கிறது... ~அன்புடன் கோகுலன்.

உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

பார்ப்பவரை சிலையாக்கிடும் உந்தன் கண்கள், தென்றலையும் வருடிடும் உந்தன் கூந்தல், ஒரு கணம் ருசி பார்க்க தூண்டும் உந்தன் இதழ்களையும், மறக்காது எந்தன் நெஞ்சம், உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை... புல்லின் நுனியில் தவழ்ந்திடும் உந்தன் கால்கள், பஞ்சில் நெய்தது போன்ற உந்தன் கைகள், பளிங்கில் வார்த்தது போன்ற உந்தன் மேனியையும், விட்டு விலகாதடி எந்தன் நிழழும், உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை... பேசாமல் எரித்திடும் உந்தன் கோபம், உன் வார்த்தைக்காக ஏங்கிடச்செய்யும் உந்தன் மௌனம், பயத்துள் மூழ்கிக்கிடக்கும் உந்தன் மதியையும், வெறுக்கிறேன் நான் தினமும், உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை... என் கனவுகளை நிரப்பிடும் உந்தன் நினைவுகளையும், என் கண்களை கலங்கிடச்செய்யும் உந்தன் வார்த்தைகளையும், என்னை நான் வெறுத்திடச் செய்த நம் காதலாலும், தவிக்கிறேன் ஒவ்வொரு நொடியும், உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை... ~அன்புடன் கோகுலன்.

என்னை கொய்தவள்!

மின்னல் பாய்ந்து தென்றல் தோய்த்து மங்கை ஆனவள்,  கண்கள் கோர்த்து நெஞ்சம் பார்த்து காதல் சேர்த்தவள், மனதுள் பூத்து மோகம் வார்த்து கவிதை தந்தவள்,  விழிக்குள் விழுந்து உணர்வுகள் கொய்து என்னை வாட்டியவள்... மெல்ல சிரித்து கொள்ளை கொண்டாள்,  முகத்தை முத்தங்களால் ஈரம் செய்தாள், கைகளுக்குள் உடலை சேர்த்துக் கொண்டாள்,  சிரிப்பால் எனையும் கைது செய்தாள்... மூளையை திருகி மனதை பிழிந்தாள்...  வானவில்லை குடையாய் வானத்தையும் கூரையாக்கினாள், நினைவுகளில் சிக்கி கனவுகளில் தவிக்கவிட்டாள்,  அவள் குரல் கேட்டு மனதையும் இளகச் செய்தாள்... புன்னகை பூவாய் என் உள்ளமெங்கும் பூத்தவள்,  ஓவியங்களாய் அவள் கண்கள் வரைந்திடச் செய்தவள், கடமைகளை மறந்து கவிதைகளை மந்திரமாக்கியவள்,  உணர்வுகள் இழந்து அவள் உறவுக்காக தவித்திடச் செய்தவள்... ~அன்புடன்  கோகுலன்.

பிரிவு

மாடி-1                                                                                                                      படி-2 வாழ்கை ஒரு நாடக மேடை, வாழ்கை ஒரு சக்கரம் என பலர் பலவாறு கூறுவதை தினமும் கேட்டு வளர்கிறோம். இதற்கு புதிதாக ஓர் அர்த்தத்தை வழங்க முடிவு செய்து விழிகள் புத்தகங்கள் சிலவற்றை ஊடுறுவத் தொடங்கியது . பல மணிநேர முயற்சிக்கு பின்பு தெளிவாக ஒன்று மட்டும் விளங்கியது, அர்த்தம் தேடிட இது ஒன்றும...

வலை!

உன்னை நினைத்து உள்ளதை உருக வைத்தாய்,  இருள் விலகினும் ஒளியின்றி திணர வைத்தாய், காரணமின்றி கானகத்தில் காக்க வைத்தாய்,  விடையில்லா வினாக்களை விழிக்குள் வைத்தாய்... வலக்கையை பிடித்து வழுக்கி வலைக்குள்ளே விழுந்தேன்,  வலி கொண்டு துடித்து வழியின்றி தவித்தேன்... கவலையின் கரையில் கரைந்து கறையானேன்,  விளக்கமின்றி விரைந்தோடி இன்று விறைத்தொடுங்கினேன்... உன் நியாயங்கள் என் காயங்கள் ஆற்றுமா?  கண்ணீரில் தோய்ந்து தேய்ந்து அழியுமா? என் காதலின் நிலைகண்டு கல்லறையும் அழைக்குமா?  என் வேதனையின் திடம் கண்டு விண்ணும் கலங்கிடுமா? காதலில் தோற்பவன் காதலை வெறுக்கிறான்,  காதலில் வெல்பவன் காதலியிடம் தோற்கிறான்... என் மங்கையின் மௌனத்தால் மனமும் மரணிக்குதே...  போதையில் வீழ்ந்தழியும் பேதையாய் ஆக்குதே... ~அன்புடன் கோகுலன்.

முடிவா?

தேடியது காதலா? நெஞ்சங்களின் மோதலா? பேசியது புரியவில்லை மனமே... மாதரின் விழி கண்டு மடமைக்குள் மூழ்கினேன், ஏங்குகிறேன் உன்னை நினைத்து தினமே... சதிகளின் சங்கமமிது சடலமாய் உடல் மாறுது, மரணத்தின் வாசலில் இன்று மண்டியிட்டு கிடக்கின்றேன்... நிமிடங்கள் முழுவதும் உன் நினைவுகளால் நிரம்புது, மனதை கட்டுபடுத்த மதி வழியின்றி தடுமாறுது... துன்பங்களும் வாழ்கையில் ஒரு பகுதி தான், என் வாழ்க்கையோ துன்பத்துள் ஒரு பகுதி தான், இன்பத்தால் சிரிக்கும் நேரம் கூட, துன்பம் என்னை வந்து அணைக்கிறது... காத்து கிடக்கும் சுகங்கள் இனி இல்லை, ஏங்கி தவிக்கும் நாட்கள் இனி இல்லை, ஒரு வார்த்தையில் நீ முடித்தாய்... இன்று என் வாழ்கையே முடிந்து விட்டதே... ~அன்புடன் கோகுலன்.

கண்ணீர்!

சிரிக்க நினைக்கிறேன் மனம் அழுது சிதையுதே,  வாழ துடிக்கிறேன் இதயம் துடிக்க மறுக்குதே, கனவு முழுவதும் இந்த கணத்தில் நொறுங்குதே,  உயிரில் பாதி என்னை புரிய மறந்ததே... வேதனையடி கண்ணே வெந்து சாகிறேன்,  பேதையடி பெண்ணே நொந்து அழுகிறேன், காதலடி நெஞ்சே நீ தீயில் எரித்தது,  உணர்வடி உயிரே நீ உடைத்து சென்றது... தேவனில்லை நான் உன்னை மறந்து மகிழ்ந்திட,  விலங்கில்லை நான் புது உறவு தேடிட, மானுடனடி உன்னை உயிராய் நேசித்தது,  சடலமானதடி இன்று உன்னை யாசித்தது... கூறுவதை கூறிவிட்டேன் இனி உன் விருப்பம்,  கவிதையல்ல பெண்ணே இது கண்ணீரின் வாசகம், நிதமும் நீ விளையாடி மகிழ்ந்திட,  இது விளையாட்டில்லை அமுதே வாழ்கை.... ~அன்புடன் கோகுலன்.

மனதின் மரணம்.

அன்பே உந்தன் குரல் ஏனோ,  என் செவி அடைந்திட மறுத்திடுதே... தனிமையில் இன்று தவிக்கும் நிலை,  தினமும் முடிவின்றி நீடித்திடுதே... உன்னை கண்டு நான் கண்விழித்தேன்,  நினைவில்லை கனவென்று உணர்ந்தேனடி... உண்மைகள் என் உணர்வுகளை வாட்டிட,  இன்று விழிகள் திறந்திடும் போதே வலித்திடுதே... என் இதயம் கண்ணீரில் நனைந்திடுதே,  குருதி இன்றி அது இன்று துடித்திடுதே... உள்ளமோ உன்னை தினம் தேடிடுதே,  உயிரோ நீ இன்றி உருகிடுதே... காதல் என்னும் பிறவித் துன்பம்,  நீ இன்றி நானும் உணர்ந்தேன்... மரணம் காண மதி விரும்பும் நிலையில்,  நீ இல்லா ஒரு உலகம் இனி வேண்டாம் அன்பே! ~அன்புடன் கோகுலன்.

ஏங்குகிறேனடி!

இதயத்துள் உன்னை சுமந்துகொண்டு,  தொலைத்தூரமும் நான் கடந்துவிட்டேன், இதழ்களோ மௌனித்துப் போனது அன்பே,  உன் குரலை கேட்டிடவே என் செவிகளும் ஏங்குது இங்கே! வீசும் காற்றில் உன் சுவாசத்தை மட்டும் தனியாய் நுகர்ந்தேன்,  உன் தடத்தில் என் கால் பதித்தே தினமும் நடந்தேன், சிந்தும் மணியாய் சிதறும் உன் சிரிப்பை கொஞ்சம் ரசித்தேன்,  உன் பார்வையில் வீழ்ந்து மடிந்திடவே இன்று வாழ்கிறேன்... உன் உடலுக்குள் உயிராய் வாழும் வரமொன்று கேட்கிறேன்,  தூரத்தில் விலகியிருந்தும் உன் நினைவுகளால் சிரிக்கிறேன், உன் குரல் இல்லா நாட்களில் சிதைந்தே மடிகிறேன்,  உனக்காய் வாழ்வதை எண்ணி மறுபடிப் பிறக்கிறேன்... நீண்ட நாட்களும், நிம்மதியில்லா உறக்கங்களும்,  என் மனதை சிறைக்குள் அடைக்குதம்மா... உன் நினைவுகளும், உன்னை காணும் கனவுகளும்,  என்னை சிறகடித்துப் பறந்திடவேச் செய்யுதம்மா! ~அன்புடன் கோகுலன்.

மனதில் கொஞ்சம் ஈரம்..

நிதமும் உன்னால் என் விழிகள் காணும் ஈரம்,  தினமும் விடியலை கண்டதும் மறைந்திட கூடும், எனினும் உன்னால் என் மனதில் உண்டான காயம்,  என் உயிர் பிரியும் போதிலும் அழியாதம்மா... நினைவுகள் இனிமையானவை தான் கண்ணே,  ஏனடி என் மனம் மட்டும் அழுகிறது? கனவுகள் சுகமானவை தான் அன்பே,  ஏனடி என் உயிர் மட்டும் உறைகிறது? கண்கள் மூடினால் உன் முகம்,  இமைகளுக்குள் செருகிய தூசியாய் உறுத்துகிறதே... சிந்தனைக்குள் உன் உருவம்,  என் உறக்கங்களையும் இன்று பறித்ததுவே... மௌனங்களுக்கு என் வார்த்தைகள் அடங்குதடி,  நிலவுக்கும் என் மனம் இன்று மயங்குதடி, ஆனால் நீ இன்றி என் மனம் மட்டும்,  காதலுக்குள் சிக்கித்  தனியாக தவிக்குதம்மா.. ~அன்புடன் கோகுலன்.

செம்மொழி!

நினைவுகள் சிதைந்தது மனம் நிமிர்ந்து நின்றது,  கனவுகள் கலைந்தது புது கற்பனைகள் பிறந்தது, வித்திட்ட விதைகளும் இன்று விண்ணுக்கு படர்ந்தது,  வேதனையின் வேர்களும் கூட கருகியே அழிந்தது... உணர்வுக்கு உயிரூட்டி உடலினை மெருகூட்டி,  மனமது தலைதூக்கி தலைக்கனம் வெறுத்தொதுக்கி, விளையாட்டாய் ஓடிய மனமது,  அர்த்தங்களை தேடிட தொடங்கியது... கணப்பொழுதில் புது கவிதைகளும்,  கடலலையாய் நிதம் திரண்டிடவே, கலைமகளுக்கு சிரந் தாழ்த்திய என் வரிகளும்,  தமிழ் அமுதை அழகாய் வார்த்தெடுத்தது... அன்று சுடுப்பட்ட நெஞ்சம் தினமும் புண்பட்டதும் கொஞ்சம்,  இன்று நான் செதுக்கிடும் வரிகளை இசை மெட்டுகளும் கொஞ்சும், மடைதிறந்த நதியலையாய் இனி என் வரிகளும்,  எல்லை இன்றியே எட்டுத்திக்கும் ஓடும்....! ~அன்புடன் கோகுலன்.

உந்தன் நினைவுகள்...

மனமது கடலலைபோல் கரைமீது அலைமோதுதே,  கனவது உன் நினைவுகளால் தினமது நிறைந்ததுவே, ஞாபகத்தில் கதவுகள் இன்று மறுபடி திறந்ததுவே,  சிந்தனைகளால் இதயமும் நிதம் சித்தரவதை பட்டிடுதே... காதல் எனும் பட்டாம்பூச்சி மீண்டும் என்னுள் குடிப்புகுந்ததே,  நேரங்கள் மறந்து பாதைகள் தொலைத்து அலையசெய்ததே, மரணத்தின் விளிம்பையும் எட்டிப் பார்த்திடும் ஆசை வந்ததே,  உன் நினைவுகளால் சிறை பட்டிருப்பதையே உயிர் தினம் விரும்புதே... தேகம் தினம் மெலிவதை மனம் ஏற்க மறுக்குது,  கதவுகள் திறந்திருந்தும் கால்கள் வெளியேறுவதை தவிர்க்குது, உன் ஓர் பார்வையால் பூத்த காதலடிப் பெண்ணே,  உனக்காய் வாழ்வதையே என் உயிர் விரும்பிடுது... பிரிவின் வலி எனும் கொடுமையை முதல்முறை உணரவைத்தாய்,  தினமும் நொடி முழுதும் உன்னை மட்டும் நினைக்கவைத்தாய், வானவில்லின் நிறங்களுக்குள் என்னை வசிக்கவைத்தாய்,  உனக்காய் அலைமோதிய உயிரையும் இன்று அழகாய் கொய்து சென்றாய்... ~அன்புடன் கோகுலன்.

சிதறல்கள்...

1. காதல், மாதாவின் கோவிலை அல்ல,   மரணத்தின் வாசலை திறந்திடும் சாவி... 2. களைத்துப் போய் கண்ணயர்கையில், முதுகில் வலியின்றி செருகிய கொடுவாள்... துரோகம்!     3. நடந்து சென்றவனை, மிதக்க செய்யும், சந்தோசத்தின் ஒரு பகுதி... வெற்றி! 4. இனிமையான வாழ்க்கையை இடித்து செல்லும், இடிந்த வாழ்க்கையை இசைக்கச் செய்யும், பிரம்மனின் படைப்பு... பெண்! ~அன்புடன் கோகுலன்

இதயத்துள் ஓர் கனவு...

தொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி,  சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி, விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி,  உனக்காய் ஏங்கிடும் மனமும் இதுவடி... கற்பனைகள் களைந்திட கலங்கிடும் கண்களடி,  வேதனையின் விளிம்பையும் தொட்டுணர்ந்த மனமடி, வெந்திடும் நொடிகளிலும் உன்னை சிந்தித்தேன் நிதமடி,  கடலுக்குள் தொலைந்த கப்பலாய் கரைதேடுகிறேன் தினமடி... பனி காலம் கூட தேகம் முழுதும் வியர்க்குதடி,  கோடையில் கூட உடல் எங்கும் குளிருதடி, தேகம் கூட உந்தன் நினைப்பால்,  தினமும் மெலிந்து சிதைந்து நொறுங்குதடி... உன்னை கரங்களுக்குள் கட்டிட என் விரல்களும் தவிக்குதடி,  உன் தடங்களில் நடந்திட என் பாதங்களும் விரையுதடி, விண்மீனும் பெண் பூவாய் உருவானதேனடி?  உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...! ~அன்புடன் கோகுலன்.

நண்பன்... (Friend)

பாதை தேடி பயணங்கள் போகும் நேரம்,  வழி துணையாய் வந்தவனும் அவனே... நிம்மதி தொலைத்து நேரம் மறந்த போது,  துக்கத்தை நான் பகிர தூக்கத்தை தொலைத்தவனும் அவனே... தடுக்கி வீழ்ந்து மிதிபட்ட வேளைகளில்,  தூக்கி விட்டு தோழ் தந்தவன் அவனே, செய்வதறியாது சிதறிய பொழுதினில்,  சேர்த்தெடுத்து சிலையாக்கியவன் அவனே... மழை வரும் வேளைகளில்,  நிதம் குடைபோல் காத்தவன், வெயில் சுடும் காலங்களில்,  நிழலாய் மாறியே குளிரும் தந்தவன்... நட்புக்கு இலக்கணமல்ல அவன்,  இதிகாசமாய் மாறியே உயர்ந்தவன் அவன், தோழமையின் தோழனும் அவன், என் உயிர் நண்பனும் அவன்தானே... ~அன்புடன் கோகுலன்.

துவக்கம்... (The Beginning)

இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது." சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம் " தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும் - சிலர் கருத்து. வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.  எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம் ... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம்...

நீ வெறுத்ததால் (Coz U Broke My Heart!)

நிலவாய் பிறந்தவள்!(Born as a moon)

Iravin Sooriyan!

Penmaiyin sirai!

Kathal Kaalanilai!

Norungiya Ithayam

En kaneer Sonna Kavithai!

Kaaviyak Kathal!

Kathalin Thollai!

Unnale Uyirvalgiren!

Vidiyalin Vasantham!

En iniyaval Ne!

Kirukkanin Kirukkal!

Kasakkum Kathal!

Visil!

Aedho enakulla

Vilaginaai

Sathiyulagam

Pudusa Oru Mokka!

Thanimai Ennum Pudhu Mozhi!

Idayam!

Eyes....

Friends.....

Idhutan Kathala?

En Kanaa

College

Biotech- The Future

Biotechnology Biotechnology a common word in the uncommon human kind i may say. A unique science to the future of man kind that is being developed in today's world, i am a student who is interested and studying in this area where many of my friends doesn't know anything about it.   Biotechnology (sometimes shortened to "biotech") is a field of applied biology that involves the use of living organisms and bio processes in engineering, technology, medicine and other fields requiring bio products. Biotechnology also utilizes these products for manufacturing purpose. Modern use of similar terms includes genetic engineering as well as cell and tissue culture technologies. The concept encompasses a wide range of procedures for modifying living organisms according to human purposes going back to domestication of animals, cultivation of plants, and "improvements" to these through breeding programs that employ artificial selection and hybridization. By com...

Kathal - The truth

Ninaivil nee

kathalin vali

VFX - The Third Eye.

The Visual FX Visual effects a common word that is being used these days in world of Media. This called as VFX,Visual effects or Visual FX. It is a process by which imagery is created or manipulated outside the context of a live action shooting. VFX is media that we can create a thing that is not really happening or that is not available in this world for us to see. This is a context which includes live action motion with a combination of imaginary generated group of pictures which helps in creating a environment which looks realistic. The VFX is used in generating scenes which are realistic, but would be dangerous, costly, or simply impossible to capture on film.VFX those are created using CGI (Computer Generated Imagery) commonly in big budget films these days. It's really been a must on those films to attract more audience and to earn more income. Visual effects are often integral to a movie's story and appeal. Although most visual effects work is completed during ...

The Tick Tock Theory of INTEL

The theory that Intel using in their production of microprocessors is called the TICK TOCK thoery.   " Tick Tock " is a model adopted by chip manufacturer Intel Corporation since 2007 to follow every micro architectural change with a die shrink of the process technology. Every "tick" is a shrinking of process technology of the previous micro architecture and every "tock" is a new micro architecture Every year, there is expected to be one tick or tock. The first architectural change was a "Die shrink" one.Presler, Cedar Mill, Yonah are the code names that were used for the first ones. On 5th of January 2006 these were launched into market as Pentium 4,D,M,Dual-Core and Celeron. The final one in the line up is "tick" the one that was built to a die shrink in the architectural change of the " Tick Tock ". The final one was a 22nm micro processor which was code named as "Ivy Bridge". This one was launched on 29th...

The Beginning

Hi Friends, Don't waste time reading my blogs if you guys are not interested in IT,Network,Media,IQ and etc.... Here i am just going to share the things that i heard,saw,read and knew.After reading my posts you can say this such a time waste so be careful when you start reading my blogs. This is my first post in the blog spot so it can be messy one... Hey! still i am a beginner so i need some time to learn the faults so kindly notify me if i  have done anything wrong K? That's all for now I'll catch you guys/girls later with my posts. Wish me luck!! ~Kohulan